For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தவானை தூக்கிட்டு, ஸ்மிருதி மந்தனாவை கொண்டு வாங்க... பிசிசிஐக்கு ரசிகர்கள் அதிரடி கோரிக்கை

By Aravinthan R

லண்டன் : ஸ்மிருதி மந்தனா இங்கிலாந்தில் நடந்து வரும் கியா சூப்பர் லீக் பெண்கள் டி20 தொடரில், பட்டையைக் கிளப்பி வருகிறார். நேற்று நடந்த போட்டியில், 60 பந்துகளில் சதமடித்து அனைவரையும் திரும்பிப் பர்ர்க்க வைத்துள்ளார் ஸ்மிருதி.

பெண்கள் கிரிக்கெட்டை எல்லாம் யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற பேச்சை உடைத்து, அனைவரும் எந்த சேனலில் ஸ்மிருதி மந்தனா ஆட்டத்தை பார்க்கலாம் என தேட வைத்துவிட்டார். கூடிய விரைவில் உலக அளவில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஒரு மார்க்கெட்டை ஏற்படுத்தினாலும் ஆச்சரியம் இல்லை.

twitter asks smiriti mandhana to replace dhawan in england


வெஸ்டர்ன் ஸ்டார்ம்ஸ் அணிக்காக ஆடி வரும் ஸ்மிருதி மந்தனா, இதுவரை ஐந்து போட்டிகளில் ஆடி இருக்கிறார். இதுவரை இந்த தொடரில் 282 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். தற்போது இவருடைய சராசரி ரன்விகிதம் 94 ஆகும். கடந்த ஐந்து போட்டிகளில், 48, 37, 52*, 43* மற்றும் 102 ரன்கள் எடுத்துள்ளார்.

மூன்றாவது போட்டியில் இவர் அடித்த அரைசதம் தான் பெண்கள் டி20 யில் அடித்த அதிவேகமான அரைசதம் ஆகும். இவரின் ஆட்டம் பற்றி ட்விட்டரில் ரசிகர்கள் அதிகம் பேசி வருகிறார்கள். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பல நாட்டு ரசிகர்களையும் பேச வைத்துள்ளார் நம் இந்திய வீராங்கனை.



இவர் ஸ்மிருதி மந்தனா ஒவ்வொரு போட்டியிலும் அடித்த ரன்களையும், அதன் ஸ்ட்ரைக்ரேட்டையும் குறிப்பிட்டுள்ளார். மந்தனாவின் ஸ்ட்ரைக் ரேட் தாறுமாறாக இருக்கிறது. பெண்கள் கிரிக்கெட்டில் வேகமாக ரன் குவிக்க மாட்டார்கள் என்ற பேச்சையும் உடைப்பது போல உள்ளது இது.



நான் தலை வணங்குகிறேன் ஸ்மிருதி மந்தனா! KSL2018 தொடரை பற்ற வைத்துவிட்டீர்கள்…..தொடரின் சிறந்த வீரருக்கான பட்டம் வெல்லப் போகிறாரா?



இவர்களைப் போல பலரும், ஸ்மிருதி மந்தனாவை இந்திய ஆண்கள் அணியின் தொடக்க வீரரராக களம் இறக்க வேண்டும் என கேட்டு வருகிறார்கள்.















Story first published: Saturday, August 4, 2018, 18:14 [IST]
Other articles published on Aug 4, 2018
English summary
Twitter asks Smiriti mandhana to replace Dhawan in England
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X