டக் அவுட்டாக வேண்டிய தோனியை காப்பாற்றிய அதிர்ஷ்டம்.. பிராவோவின் பவுலிங்.. சென்னை வெற்றி ரகசியம்

சென்னை:ராஜஸ்தானுக்கு எதிராக டக் அவுட்டாகி வெளியே சென்றிருக்க வேண்டிய தோனி, அருமையான ஆட்டத்தின் மூலம் சென்னையை வெற்றி பெற வைத்திருக்கிறார். அதிர்ஷ்டம் தான் அவரது விக்கெட்டை காப்பாற்றியது எனலாம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, களமிறங்கிய சென்னை அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி. 27 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சென்னை அணியின் ராயடு 1 ரன்னிலும், வாட்சன் 13 ரன்னிலும், ஜாதவ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இடியே ஆனாலும் தாங்கிக் கொள்ளும் இதயம்.. ரஹானே ரொம்பப் பாவம்.. போட்டியும் போச்சு.. காசும் போச்சே!

சென்னை முதலிடம்

சென்னை முதலிடம்

ஆனால்... இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் சென்று ஜம்மென்று உட்கார்ந்து கொண்டது. அதற்கு தோனியின் அதிர்ஷ்டம் காரணம் என்று கூட கூறலாம்.

தோனியின் ஆட்டம்

தோனியின் ஆட்டம்

தோனி நேற்றைய போட்டியில் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார். 46 பந்துகளை எதிர்கொண்ட அவர் 75 ரன்களை குவித்தார். அவரது இந்த ஸ்கோர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கை கொடுத்த அதிர்ஷ்டம்

கை கொடுத்த அதிர்ஷ்டம்

இந்த போட்டியில் தோனிக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்தது என்றே சொல்லலாம். ஏனெனில், 6வது ஓவரின் போது அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் என்று சென்னை தத்தளித்து கொண்டிருந்தது.

அவுட்டாகாமல் தப்பித்தார்

அவுட்டாகாமல் தப்பித்தார்

அந்த ஓவரின் 4வது பந்தை வீசுகிறார் ஆர்ச்சர். அப்போது அந்த பந்தை எதிர்கொண்ட தோனி... தமது பேட்டால் தடுத்து ஆடுகிறார். ஆனால்.. பேட்டில் பட்ட அந்த பந்து... மெதுவாக உருண்டு ஸ்டெம்பில் பட்டது. ஆனால்... பெயில்ஸ் கீழே விழவில்லை.

முடிவே மாறியிருக்கும்

முடிவே மாறியிருக்கும்

ஒருவேளை.. பெயில்ஸ் கீழே விழுந்திருந்தால்.. தோனி அவுட்டாகி இருப்பார். போட்டியின் முடிவே ஒட்டுமொத்தமாக மாறியிருக்கும். அந்த தருணத்தில் தோனிக்கு கிடைத்த அந்த அதிர்ஷ்டம்... அவர் 75 ரன்கள் அடிக்க காரணமாக அமைந்தது.

வைரல் வீடியோ

அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பந்தில் தோனி அவுட்டாகாமல் தப்பித்த அந்த தருணம்... ராஜஸ்தான் வீரர்களின் முகங்களை பார்க்கணுமே... பெருத்த ஏமாற்றம் தான்.

கை கொடுத்த கடைசி ஓவர்

கை கொடுத்த கடைசி ஓவர்

அதே போட்டியில் மற்றொரு சுவாரசியமான சம்பவம். போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலுமே கடைசி ஓவர் தான் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

நிதான தோனி

நிதான தோனி

முதலில் ஆடிய சிஎஸ்கே அணி, குறைந்த ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழக்க, அவசரப்படாமல் கடைசி வரை களத்தில் நின்ற தோனி, ஸ்கோரை உயர்த்தினார். ஒரு கட்டத்தில் 160 ரன்களை எட்டிபிடிக்கும் என்று கணிப்புகள் கூறப்பட்டன.

ஒரு ஓவரில் 28 ரன்கள்

ஒரு ஓவரில் 28 ரன்கள்

ஆனால்... உனாத்கத் வீசிய கடைசி ஓவரில் 28 ரன்களை குவித்து 175 ரன்கள் என்று கொண்டு போய் சேர்த்தார் தோனி. 176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

வெற்றிக்கு காரணம்

வெற்றிக்கு காரணம்

நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஸ்டோக்ஸை கடைசி ஓவரின் முதல் பந்திலேயே வீழ்த்தினார் பிராவோ. அந்த ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார் பிராவோ. அதனால் சிஎஸ்கே அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனியின் அதிர்ஷ்டம், பிராவோவின் அந்த கடைசி ஓவர்தான் சென்னையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dhoni should have gone out of the match against Rajasthan. Fortunately, his wicket was saved.
Story first published: Monday, April 1, 2019, 13:08 [IST]
Other articles published on Apr 1, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X