நடப்பு சீசனில் சிஎஸ்கே பாசிட்டிவ் என்ன..? அடுத்த வருசம் சிஎஸ்கே எப்படி விளையாடும்.. ஃபிளமிங் பதில்

மும்பை: நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 15வது சீசன் ஏமாற்றத்தை தந்தது. சென்னை அணியை பொறுத்தவரை அதிக போட்டியில் நடப்பு சீசனில் தான் தோல்வியை தழுவி இருக்கிறது.

சென்னை அணியின் முக்கிய வீரர்கள் காயம், கேப்டன் பதவி மாற்றம், ஓய்வு முடிவை அறிவித்துவிட்டு பின்னர் திரும்ப பெற்றது என சென்னை அணியில் பல சம்பவங்கள் நடந்துவிட்டன.

6 பேருக்கு காயம்..நட்சத்திர வீரர்களும் இன்றி தவிக்கும் இந்திய அணி..தென்னாப்பிரிக்க தொடரில் பின்னடைவு6 பேருக்கு காயம்..நட்சத்திர வீரர்களும் இன்றி தவிக்கும் இந்திய அணி..தென்னாப்பிரிக்க தொடரில் பின்னடைவு

இந்த நிலையில், சிஎஸ்கே அணி பெருமைப்படும் அளவில் , நடப்பு சீசனில் ஒரு விசயம் கூட நடக்கவில்லையா என்று பயிற்சியாளர் பிளமிங்கிடம் கேள்வி எழுப்பபட்டது.

2 வீரர்கள்

2 வீரர்கள்

அதற்கு அவர், 2020ஆம் ஆண்டு சிஎஸ்கேக்கு எப்படி ருத்துராஜ் கிடைத்தாரோ, அதே போல் தற்போது எங்களுக்கு 2 இளம் வீரர்கள் நடப்பு சீசனில் நம்பிக்கை அளித்தனர். வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி முதலில் கொஞ்சம் சொதப்பினாலும், அவருக்கு தொடர்ந்து அணி நிர்வாகம் ஆதரவும் வாய்ப்பும் தந்தது.

முகேஷ் சௌத்ரி

முகேஷ் சௌத்ரி

அது எங்களுக்கு சீசன் முடிவில் நல்ல பலனை தந்தது. போட்டியில் விளையாட, விளையாட முகேஷ் சௌத்ரிக்கு வேகம் அதிகரித்தது. பந்தை எந்த இடத்தில் வீச வேண்டும், பந்தை ஸ்விங் செய்வது குறித்தும் நன்றாக கற்று கொண்டார். சிஎஸ்கே அணிக்கு எதிர்காலத்தில் நல்ல நம்பிக்கை அளிக்கும் வீரராக இருப்பார்.

ஷிம்ரஜித் சிங்

ஷிம்ரஜித் சிங்

இதே போன்று ஷிம்ரஜித் சிங்கும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தனது திறமையை நிரூபித்தார் என்று ஃபிளமிங் இவ்விரு வீரர்களையும் சென்னை அணி பாசிட்டிவாக கூறினார். அடுத்த சீசனில் தீபக் சாஹர், மதிஷா பிரதன்னா, ஜடேஜா ஆகியோர் திரும்பி விடுவார்கள் என்பதால் சிஎஸ்கேவின் பலம் அதிகரிக்கும்.

சிஎஸ்கே அடுத்த ஆண்டு

சிஎஸ்கே அடுத்த ஆண்டு

ஆனால் சிஎஸ்கே அணியிடம் 2 குறைகள் உள்ளன. நடுவரிசையில் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. சிவம் துபே தொடர்ந்து ரன் சேர்க்கவில்லை, ராபின் உத்தப்பாவும் ஏமாற்றினார், ராயுடுவும் அடுத்த ஆண்டு விளையாடுவாரா என தெரியவில்லை. இதனால் ஒரு வெளிநாட்டு ஆல்ரவுண்டர், இல்லை நல்ல பேட்ஸ்மேன்களை சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு ஏலத்தில் எடுக்க வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Two Positives for chennai super kings in IPL 2022 according to Fleming நடப்பு சீசனில் சிஎஸ்கே பாசிட்டிவ் என்ன..? அடுத்த வருசம் சிஎஸ்கே எப்படி விளையாடும்.. பயிற்சியாளர் ஃபிளமிங் பதில்
Story first published: Sunday, May 22, 2022, 16:50 [IST]
Other articles published on May 22, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X