For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் ஐபிஎல் 2021.. இந்த ரெண்டு டீம்.. கண்டிப்பா 'கப்' ஜெயிக்க வாய்ப்பு - அட செம!

சென்னை: ஒருவேளை ஐபிஎல் 2021 தொடர் மீண்டும் தொடங்கினால், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் எவை என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

கொரோனா 2வது அலை, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி வருகிறது. மக்கள் கொத்து கொத்தாக இறக்கும் அவல நிலையில் இன்று நாடு உள்ளது. போதிய மருந்துகள் கிடைக்காமல், ஆக்சிஜன் இல்லாமல், படுக்கைகள் கூட இல்லாமல் மக்கள் அல்லாடி வருகின்றனர்.

 Exclusive: ஹர்திக் பாண்ட்யா தமிழரா?.. பல வருஷத்துக்கு முன்பு.. - அமெரிக்க தமிழ் ஆய்வாளர் Exclusive: ஹர்திக் பாண்ட்யா தமிழரா?.. பல வருஷத்துக்கு முன்பு.. - அமெரிக்க தமிழ் ஆய்வாளர்

இந்த சூழலில், ஐபிஎல் பயோ-பபுளையும் மீறி உள்ளே நுழைந்த கொரோனா, கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தியை தாக்கியது. பிறகு அடுத்தடுத்து வீரர்கள், நிர்வாகிகள் என்று கொரோனா பலரையும் ஆட்கொள்ள ஐபிஎல் 2021 தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தொடரும் சிக்கல்

தொடரும் சிக்கல்

இப்போது உள்ள நிலைமைக்கு, மீண்டும் ஐபிஎல் தொடங்க வாய்ப்பே இல்லை. அதேசமயம், அக்டோபர், நவம்பர் காலக்கட்டத்தில், டி20 உலகக் கோப்பைத் தொடர் முடிந்த பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியுமா? என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இலங்கை கூட, நாங்கள் ஐபிஎல் போட்டிகளை நடத்தித் தருகிறோம் என்று கூறிய நிலையில், அந்த நாட்டில் இப்போது தினசரி வைரஸ் பாதிப்பு எகிறி வருவதால், அங்கு நடத்துவதிலும் சிக்கல் நிலவுகிறது.

கன்டினியூ ஆகுமா?

கன்டினியூ ஆகுமா?

சரி.. தொடர் தொடங்குவது ஒருபக்கம் இருந்தாலும், அப்படியே மீண்டும் தொடங்கப்பட்டாலும், இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய அணிகள் மீண்டும் அதே ஃபார்மை தொடருமா? மன ரீதியிலான இத்தனை இன்னல்களை கடந்து, மீண்டும் அணியை ஒருங்கிணைத்து, எனர்ஜியை ஊடுருவ விட்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்க முடியுமா? என்பது உண்மையில் சவாலான விஷயம் தான்.

கடும் சவால்

கடும் சவால்

அந்த வகையில், மீண்டும் ஐபிஎல் 2021 தொடர் எப்போது தொடங்கினாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே கோப்பையை வெல்வதில் கடும் சவால் இருக்கும் என்கின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள். இதில், பெங்களூரு அணியைப் பொறுத்தவரை விராட் கோலி, ஏ பி டி வில்லியர்ஸ் எப்போதும் 'கன்சிஸ்டண்ட்' வெளிப்படுத்தக் கூடிய பிளேயர்ஸ். தூக்கத்தில் எழுப்பி பேட்டிங் செய்யச் சொன்னாலும், சிக்ஸ் அடிப்பவர் டி வில்லியர்ஸ். அதேபோல், கோடிகளை கொட்டி எடுக்கப்பட்ட மேக்ஸ்வெல், தன்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தலைகீழ் நின்று தண்ணீர் குடித்து, இந்த சீசனில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மேட்சுக்கு மேட்ச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அதை எப்போதுமே தொடரை அவர் விரும்புவார். ஏனெனில், கருவேப்பிலையாக தூக்கி வீசப்பட்டிருக்க வேண்டியவர், பெங்களூரு அணியால், 'சிக்கன் 65' ரேஞ்சுக்கு தரம் உயர்த்தப்பட்டு ரசிகர்களுக்கு சுவையாக பரிமாறப்பட்டதற்கான நன்றிக் கடன் அவருக்கு எப்போது விளையாடச் சொன்னாலும் இருக்கும், இருக்க வேண்டும். பின்ன, சும்மாவா 14.25 கோடிப்பு!

அதே கெத்து

அதே கெத்து

அதேபோல் தேவ்தத் படிக்கல்.. ஆர்சிபி-யின் தேவ தூதர்-னு கூட ரைமிங்கிற்காக சொல்லலாம். அந்தளவுக்கு போன சீசனிலும் சரி, இந்த சீசனிலும் சரி அட்டகாசமாக ஆடி வருகிறார். குறிப்பாக, இந்த சீசனில், 'வெறியேத்திட்டு வந்திருக்கேன்.. என் கண்ணு முன்னாடி ஒருத்தன் நிக்காத' என்ற மோடில் அதகளப்படுத்தியுள்ளார். அதில், ஒரு முத்தான செஞ்சுரியும் அடக்கம். ஸோ, கோலி, ஏபிடி, மேக்ஸ்வெல், தேவ்தத்' ஆகிய இந்த நால்வரின் ஃபார்ம் வேறு எந்த அணிக்கும் கிடைக்காத வரப்பிராசதம். அதேபோல், பவுலிங்கில் சிராஜின் எழுச்சி, சாஹல், வாஷிங்டனின் ஸ்பின் ஜாலம் என ஒட்டுமொத்தமாக ஆர்சிபி எப்போது விளையாடினாலும் ஒரு பலமான அணியாக இருக்கும் என்கின்றனர்.

பெஸ்ட் மெடிசின்

பெஸ்ட் மெடிசின்

மறுபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ். ருதுராஜ் கெய்க்வாட், ரெய்னா, ஜடேஜா, ராயுடு, தோனி என்ற ஐந்து இந்திய வீரர்களின் ஆளுமை நிறைந்த களம் இந்த சீசனில் சிஎஸ்கே-வின் பலம். தவிர, மேட்சுக்கு மேட்ச் அரைசதம் அடிக்கும் டு பிளசிஸ் தோனிக்கு கிடைத்த பெஸ்ட் மெடிசின். இந்த ஆறு பேரில், 3 பேர் ஒர்க் அவுட் ஆனாலே ஸ்கோர் 180+ போய்விடும். ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பு காரணமாக மொயீன் அலியும், சாம் கரணும் அணியில் இல்லாமல் போவது பேரிழப்பு. அதை ஈடுகட்ட பிராவோ, ஷர்துள் தாகூர் ஆகியோர் இருப்பது ஆறுதல்.

தோனி கேப்டன்

தோனி கேப்டன்

எல்லாவற்றுக்கும் மேலாக, தோனி, அணியின் கேப்டன் என்பது கூடுதல் பலம். அணியின் கட்டமைப்பு குலையாமல், அப்படியே மீண்டும் எப்படி களமிறக்குவது என்ற வித்தை அவருக்கும் நிச்சயம் தெரியும். அவரது சிஷ்யர் கோலி. டீமும் நன்றாக செட் ஆகியிருப்பதால், மற்ற ஆறு அணிகளை காட்டிலும், சிஎஸ்கேவும், ஆர்சிபி-யும், ஐபிஎல்-2021 மீண்டும் தொடங்கும் பட்சத்தில், கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Thursday, May 13, 2021, 23:01 [IST]
Other articles published on May 13, 2021
English summary
two teams chance win ipl 2021 series title - ஐபிஎல் 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X