For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய U-19 அணியில் ஒரு ஹர்திக் பாண்டியா ..!! பேட்டிங், பந்துவீச்சு என அசத்துகிறார்..!!

துபாய்: ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் எத்தனை ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை கையை விட்டு எண்ணிவிடலாம்

கபில்தேவ், மனோஜ் பிரபாகர், இர்பான் பதான், ஹர்திக் பாண்டியா என இந்த 4 வீரர்கள் மட்டுமே வேகப்பந்துவீச்சை வீசும் ஆல் ரவுண்டர்கள் என்று அழைக்கப்பட்டனர்

“அந்த 4 பேர் கன்பார்ம்”.. முதல் டெஸ்டுக்கான இந்திய ப்ளேயிங் 11.. அடித்துக்கூறும் முன்னாள் வீரர்! “அந்த 4 பேர் கன்பார்ம்”.. முதல் டெஸ்டுக்கான இந்திய ப்ளேயிங் 11.. அடித்துக்கூறும் முன்னாள் வீரர்!

ஆனால் தற்போது ஐ.பி.எல்., டி20 வருகைக்கு பிறகு இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலுமிருந்து ஆல் ரவுண்டர்கள் வர தொடங்கிவிட்டனர்.

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்

தற்போது இந்திய U-19 அணிக்காக விளையாடி வரும் ஒரு வீரர் தான் அடுத்த சிறந்த ஆல் ரவுண்டராக வர வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணியில் அறிவிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவை சேர்ந்த வீரர் தான் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்.

ஹர்திக் போல்..

ஹர்திக் போல்..

உலகக் கோப்பை தொடருக்கு தயராகும் விதமாக தற்போது U19 கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரின் கீழ் வரிசையில் இறங்கும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஹர்திக் போல் அதிரடியாக ஆடி ரன் சேர்த்து வருகிறார். பேட்டிங் மட்டுமல்ல பந்துவீச்சின் ஒபனிங்கும் அவரே.

மாஸ் பேட்டிங்

மாஸ் பேட்டிங்

யு.ஏ.இ. அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ராஜ்வர்தன், 23 பந்துகளை எதிர்கொண்டு 48 ரன்களை விளாசினார். அந்த போட்டியில் பந்துவீச்சிலும் அசத்திய ராஜ்வர்தன் 24 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதே போன்று பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ராஜ்வர்தன் 20 பந்துகளில் 33 ரன்கள் விளாசியுள்ளார்.

Recommended Video

Hardik Pandya Set To Miss India’s Home Series Against West Indies | Oneindia Tamil
கவனம் பெறுகிறார்

கவனம் பெறுகிறார்

தற்போது வரை 5 ஓவர் வீசி 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதனால் U-19 உலகக் கோப்பை தொடரில் ராஜ்வர்தன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. அந்த தொடரில் அவர் கலக்கினால் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் அவருக்கு அணிகள் போட்டு போடும். இந்திய அணிக்குள் வரவும் வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, December 25, 2021, 18:53 [IST]
Other articles published on Dec 25, 2021
English summary
U-19 Indian Team Rajvardhan Hangargekar all rounding Performance attracts fans இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரின் கீழ் வரிசையில் இறங்கும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஹர்திக் போல் அதிரடியாக ஆடி ரன் சேர்த்து வருகிறார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X