For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சின்னப்பசங்க எவ்ளோ அழகா கப் அடிக்கிறாங்க” U19 உலகக்கோப்பை வெற்றி.. இந்திய அணியை விளாசும் ரசிகர்கள்

ஆண்டிகுவா: இந்திய U19 அணி உலகக்கோப்பையை வென்று சாதித்த நிலையில் இந்திய மெயின் அணியை ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் பெத்தேல் (2), கேப்டன் டாம் ப்ரெஸ்ட் (0), வில் லக்ஸ்டன் (4), ஜார்ஜ் பெல் (0) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் அந்த அணி 91 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்தது. எனினும் ஜேம்ஸ் ரேவ் மற்றும் கடைசி வரை போராட அந்த அணி 44.5 ஓவர்களில் 189 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ராஜ் பவா 5 விக்கெட்டையும், ரவிகுமார் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்தை மிரட்டினர்.

இந்திய அணி இன்னிங்ஸ்

இந்திய அணி இன்னிங்ஸ்

190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ரன் ஏதும் அடிக்காமல் முதல் விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் களமிறங்கிய துணைக்கேப்டன் ஷாயிக் ரஷித் மீண்டும் ஒரு அரைசதம் விளாசி அவுட்டானார். மறுமுறம் கேப்டன் யாஷ் துல் 17 ரன்களுக்கு வெளியேற இந்திய அணி 94 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து சற்று தடுமாறியது. எனினும் இறுதியில் நிஷாந்த் சிந்து சிறப்பான அரைசதம் அடிக்க இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

சரித்திர வெற்றி

சரித்திர வெற்றி

U 19 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணி பெறும் 5வது கோப்பை இதுவாகும். இதற்கு முன்னர் முகமது கைஃப், விராட் கோலி, உம்முக் சந்த், பிரித்வி ஷா ஆகியோர் கோப்பை வென்று சாதித்த நிலையில் தற்போது யாஷ் துல் மேலும் ஒரு கோப்பையை இந்தியாவுக்கு பரிசளித்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விட்டு விளாசும் ரசிகர்கள்

விட்டு விளாசும் ரசிகர்கள்

இதற்கு ஒருபுறம் பாராட்டுக்கள் குவியும் நேரத்தில், மற்றொரு புறம் இந்திய மெயின் அணியை ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர். "இந்தியாவின் U19 வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் வரை சென்று அந்த மண்ணில் ஒருபோட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வெல்கிறது. ஆனால் சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் மோசமான தோல்விகளை பெற்று அவமானப்படுத்தீனிர்களே... அனுபவம் இருந்தும் இவ்வளவு கேவலமாக தோற்கலமா? என்று முன்னணி வீரர்கள் ஒவ்வொர் குறித்தும்

ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Recommended Video

IPL 2022 format explained: 10 teams divided into two groups of five | Oneindia Tamil
சரமாரி கேள்விகள்

சரமாரி கேள்விகள்

இதே போல கேப்டன்சி விவகாரத்திலும் சரமாரி கேள்விகள் பறக்கின்றன. U19 அணியில் கொரோனா பரவிய சூழலிலும் கூட மீதமிருந்த வீரர்களை வைத்து கோப்பை வென்றுள்ளனர். ஆனால் மெயின் அணியில் வீரர்கள் தேர்வு சரியில்லை, கேப்டன்களை, பிட்ச் மீது பழிப்போடுவது என இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு சமாளிக்கப்போகிறீர்கள் என பிசிசிஐ விமர்சிக்கின்றனர். மேலும் சிலர் இந்திய முன்னணி வீரர்களை கேலி சித்திரமாகவும், மீம்கள் மூலமும் கிண்டலடித்துள்ளனர்.

இதனால் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Sunday, February 6, 2022, 7:41 [IST]
Other articles published on Feb 6, 2022
English summary
Team Indian players facing criticizme after India U19 won the 5th worldcup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X