For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. இந்தியர்கள் பெருமைப்படும் நேரம்.. IND vs ENG எங்கு? எப்படி பார்ப்பது

வெஸ்ட் இண்டீஸ்: U 19 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Recommended Video

U19 Finals 2022 | இந்தியர்கள் பெருமைப்படும் நேரம் | Oneindia Tamil

கொரோனாவுக்கு மத்தியிலும் மேற்கிந்திய தீவுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.

லீக் போட்டிகளில் அசத்தல் வெற்றிகளை பதிவு செய்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி

இரு அணிகளும் லீக் போட்டிகளில் இதுவரை ஒரு தோல்வியை கூட பெறாமல் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளன. இந்திய அணி 2018ம் ஆண்டிற்கு பிறகு 5வது முறையாக உலகக்கோப்பையை வெல்ல காத்துள்ளது. மற்றொருபுறம் 1998க்கு பிறகு ( 24 ஆண்டுகள் காத்திருப்பு) இங்கிலாந்து 2வது முறையாக கோப்பையை வெல்ல கடும் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.

போட்டி எங்கு, எப்போது?

போட்டி எங்கு, எப்போது?

வெஸ்ட் இண்டீஸின் சர்.விவின் ரிச்சர்ட்சன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. 2011ல் இந்திய மெயின் அணி உலகக்கோப்பை தொடரின் வெற்றியை நள்ளிரவில் கொண்டாடியதை போன்றே இன்றும் கொண்டாட காத்துள்ளனர்.

எப்படி பார்க்கலாம்

எப்படி பார்க்கலாம்

இப்போட்டியை நேரடியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரபரப்பு செய்கிறது. அதன்படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 HD , ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 2 ஹெச்.டி ஆகிய சேனல்களில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை டிஸ்னி + ஹாட்ஸ்டார் செயலியிலும் நேரடியாக காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிக்குறித்த அப்டேட்கள் மற்றும் சுவாரஸ்ய நிகழ்வுகளை மைக்கேல் தமிழ் வலைதளப்பக்கத்திலும் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

கோலி தந்த அட்வைஸ்

கோலி தந்த அட்வைஸ்

இந்த போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் கேப்டன் யாஷ் துல்லிற்கு சிறப்பு அட்வைஸ் கொடுத்துள்ளனர். இந்திய அணி வீரரும், U 19 உலகக்கோப்பையை வென்றுக்கொடுத்த கேப்டனுமான விராட் கோலி நேற்று U19 அணியை வீடியோ கால் மூலம் சந்தித்து ஆலோசனைகளை வழங்கினார். இதனால் அதிக நம்பிக்கையுடன் இந்திய இளம் வீரர்கள் களம் காணுகின்றனர்.

இந்திய அணிக்கு இதற்கு முன்னர் கோப்பை வென்றுக்கொடுத்தவர்கள்

முகமது கைஃப் - 2000

விராட் கோலி - 2008

உன்முக்த் சந்த் - 2012

ப்ரித்வி ஷா - 2018

Story first published: Saturday, February 5, 2022, 15:55 [IST]
Other articles published on Feb 5, 2022
English summary
India vs england in U19 WorldCup Final starts today. The final of the series takes place today in the middle of the Corona in the West Indies. Fans are eagerly waiting for the Indian team to win the U 19 World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X