For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொம்ப பெருமையா இருக்குங்க... இந்தியா -யூஏஇ உறவு குறித்து எமிரேட்ஸ் கிரிக்கெட் சங்கம்

துபாய் : யூஏஇயில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில், இது பிசிசிஐயின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான முடிவு என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஒருபுறம் இருந்தாலும் இந்தியா மற்றும் யூஏஇ இடையிலான வர்த்தகக உறவு வரலாற்றில் மிகவும் முக்கியமானது என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் காலித் அல் சரூனி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை யூஏஇ அரசு மிக சிறப்பாக கையாண்டு வருவதாகவும் காலித் அல் சரூனி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதான் உண்மையான மேட்டர்.. யுவராஜை டீமில் எடுத்த கோலி.. ரகசியத்தை போட்டு உடைத்த தோனி!இதுதான் உண்மையான மேட்டர்.. யுவராஜை டீமில் எடுத்த கோலி.. ரகசியத்தை போட்டு உடைத்த தோனி!

எமிரேட்ஸ்ட் கிரிக்கெட் சங்கம் மகிழ்ச்சி

எமிரேட்ஸ்ட் கிரிக்கெட் சங்கம் மகிழ்ச்சி

கொரோனா பரவலையடுத்து இந்தியாவில் நடத்தப்பட வேண்டிய ஐபிஎல் 2020 போட்டிகள் யூஏஇயில் நடத்தப்பட உள்ளது. இதற்கென அரசு அனுமதி இன்னும் இரு தினங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது மிகப்பெரிய மற்றும் முக்கியமான முடிவு என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

மிகவும் முக்கியமானது

மிகவும் முக்கியமானது

ஐபிஎல் தொடர் மட்டுமின்றி இந்தியா மற்றும் யூஏஇ இடையிலான வர்த்தக உறவு வரலாற்றில் மிகவும் முக்கியமானது என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் காலித் அல் சரூனி தெரிவித்துள்ளார். துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டிக்கு அளித்த பேட்டியில், இந்தியாவுடனான இந்த உறவு குறித்து யூஏஇ மிகவும் பெருமை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யூஏஇ பெருமிதம்

யூஏஇ பெருமிதம்

கொரோனா பரவலை மிகவும் சிறப்பாக யூஏஇ கையாண்டு வருவதாகவும் சரூனி பெருமிதம் தெரிவித்துள்ளார். முதல்கட்ட பரவலின்போதே கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக பாதுகாப்பு நடைமுறையில் ஈடுபட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகவும், மீண்டவர்கள் அதிகமாகவும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐபிஎல் குறித்து இசிபி

ஐபிஎல் குறித்து இசிபி

யூஏஇயின் விமானநிலையங்கள் அனைத்தும் மிகுந்த பாதுகாப்புடன் கையாளப்பட்டு வருவதாக அவர் கூறினார். கடந்த 2014ல் ஐபிஎல் போட்டிகளை நடத்தியதன்மூலம் சிறப்பான அனுபவங்கள் கிடைத்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதனிடையே, ஐபிஎல் போட்டிகளை சிறப்பான வகையில் நடத்த முடியும் என்று இசிபியின் பொது செயலாளர் முபாஷிர் உஸ்மானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, August 4, 2020, 15:20 [IST]
Other articles published on Aug 4, 2020
English summary
ECB confident in delivering a successful IPL tournament -Secretary General
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X