For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது ஒரு நோய் பரப்பும் கருவி.. அதிர வைத்த இங்கிலாந்து பிரதமர்.. கடும் எதிர்ப்பு!

லண்டன் : பிரிட்டிஷ் நாட்டில் கொரோனா வைரஸ் உச்சம் அடைந்து தாற்போது ஓரளவு நிலைமை சீரடைந்து வருகிறது.

Recommended Video

Cricket போட்டிகளுக்கு தடையா? England பிரதமரின் அதிர வைக்கும் பதில்

எனினும், மீண்டும் கொரோனா வைரஸ் உச்சம் பெறலாம் என்றே சுகாதார அதிகாரிகள் கருத்து கூறி உள்ளனர்.

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பிரிட்டிஷ் நாட்டில் கிரிக்கெட் தடை தொடருமா? என்று கேட்ட போது அதிர வைக்கும் பதில் ஒன்றை கூறி உள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

இனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது.. மூத்த வீரரை கலாய்த்த சச்சின்.. செம வைரல் போட்டோ!இனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது.. மூத்த வீரரை கலாய்த்த சச்சின்.. செம வைரல் போட்டோ!

இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்காமல் உள்ளது. இங்கிலாந்து அணி மட்டுமே முதல் அணியாக தொடர்ந்து இரண்டு நாடுகளுடன் கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் ஆகி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.

நோய் பரப்பும் கருவி

நோய் பரப்பும் கருவி

இந்த நிலையில், கிரிக்கெட் பந்து இயற்கையாகவே நோய் பரப்பும் கருவி என குறிப்பிட்டுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன். அவரது கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது. கூடைப்பந்து, கால்பந்து ஆகியவற்றுக்கு அனுமதி அளித்த நிலையில் கிரிக்கெட்டுக்கு மட்டும் தடையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிரிக்கெட்டில் உள்ள பிரச்சனை

கிரிக்கெட்டில் உள்ள பிரச்சனை

போரிஸ் ஜான்சன் கூறுகையில், "கிரிக்கெட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால் அதன் பந்து இயற்கையாகவே நோயை பரப்பும் கருவி. எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அது இருக்கும். அதை பல முறை நம் விஞ்ஞான நண்பர்களிடம் கேட்டு உறுதி செய்துள்ளோம்" என்றார்.

குழப்பம்

குழப்பம்

இதில் மற்றொரு குழப்பமும் உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்னும் இரு வாரங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், போரிஸ் ஜான்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

அமெச்சூர் கிரிக்கெட்

அமெச்சூர் கிரிக்கெட்

சிலர் கிளப் கிரிக்கெட் மற்றும் அமெச்சூர் கிரிக்கெட் விளையாடத் தான் தடை தொடர்கிறது. சர்வதேச போட்டிகள் மற்றும் மாநில அளவிலான கிரிக்கெட் ஆட தடை இல்லை எனவும் கூறி வருகின்றனர். எனவே, இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் எந்த சிக்கலும் இன்றி நடக்கும் என கூறுகின்றனர்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாஹன். மிக வெளிப்படையாக அமெச்சூர் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை "இது முற்றிலும் அறிவு இல்லாத முடிவு" என விமர்சனம் செய்துள்ளார். விரைவில் தடையை நீக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

Story first published: Wednesday, June 24, 2020, 20:46 [IST]
Other articles published on Jun 24, 2020
English summary
UK PM Boris Johnson claims cricket balls is a natural vector of disease when asked about cricket ban in UK.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X