For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுல போய் விளையாடி இந்தியாவை ஜெயிக்கணும்... ஆஸி. கோச்சின் லட்சியம்

மெல்போர்ன் : இந்தியாவில் போய் விளையாடி இந்திய அணியை ஜெயிப்பதே தன்னுடைய முக்கியமான லட்சியம் என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். அதேபோல ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அதை வெற்றி கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், ஆனால் இது நிரந்தரமானது அல்ல என்றும் கூறியுள்ளார்.

இதேபோல ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, டி20 உலக கோப்பையை வெற்றி கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா முதலிடம்

ஆஸ்திரேலியா முதலிடம்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆஸ்திரேலியா முதலிடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆனால், இத்தகைய விஷயங்கள் நிரந்தரமானது அல்ல என்றும், தற்காலிகமாக மகிழ்ச்சி அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியை வெற்றி கொள்ள வேண்டும்

இந்திய அணியை வெற்றி கொள்ள வேண்டும்

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அவர்களது சொந்த மண்ணில், அவர்களை வெற்றி கொள்ள வேண்டும் என்பதே தனது பிரதான லட்சியம் என்று தெரிவித்துள்ளார். இதேபோல, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியையும் வெற்றி கொள்ள வேண்டும் என்பதும் தனது விருப்பம் என்று கூறியுள்ளார்.

சிறந்த அணியாக மாற்ற தீவிரம்

சிறந்த அணியாக மாற்ற தீவிரம்

ஆஸ்திரேலிய அணியை சிறப்பானதாக்க, தான் விரும்பிய வண்ணம் வடிவமைக்க பல்வேறு விஷயங்களை செய்ய வேண்டியுள்ளதாகவும் லாங்கர் கூறியுள்ளார். இதற்கென கடந்த சில வருடங்களாக, மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியிலும் பல்வேறு விஷயங்களை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஆஸி. அணி உலக கோப்பையை வெல்லும்

ஆஸி. அணி உலக கோப்பையை வெல்லும்

மேலும் ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் என்று லாங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக கோப்பையை வெற்றி கொள்வது என்பது எவ்வளவு கடினமானது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான் என்று கூறிய லாங்கர், ஆனால் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸி அணி, டி20 உலக கோப்பையை தங்களது தலைக்கு மேல் தூக்கி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் நாள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 1, 2020, 19:37 [IST]
Other articles published on May 1, 2020
English summary
Justin Langer says beating India in their own den remains ultimate goal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X