For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி மாதிரி வரவேண்டிய ஆளுங்க நான்..! என்னை கெடுத்ததே கிரிக்கெட் வாரியம் தான்..! இளம்வீரர் புகார்

Recommended Video

Watch Video : Umar akmal blames Pakistan cricket board

இஸ்லாமாபாத்: கிரிக்கெட் வாரியம் எனக்கு போதிய வாய்ப்புகள் அளித்து இருந்தால் கோலி மாதிரி நானும் சாதனை வீரராக உருமாறி இருப்பேன் என்று பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் திறமைமிக்க வீரர் என்றால் அதில் நிச்சயம் உமர் அக்மலின் பெயர் இருக்கும். அந்த திறமை மிக்கவரான அவர், தற்போது, கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறார்.

வின்பெக் ஹாக்ஸ் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு அவர் ஒரு பரபரப்பான புகார் ஒன்று தெரிவித்திருந்தார். முடிவை முன்னரே நிர்ணயிக்கும் வகையில் சூதாட்டத்தில் ஈடுபட தம்மை சிலர் அணுகியதாக கூறியிருக்கிறார்.

சூதாட்ட அழைப்பு

சூதாட்ட அழைப்பு

அதாவது, அமெரிக்காவில் வசித்து வரும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மன்சூர் அக்தர் தன்னை சூதாட்டத்தில் ஈடுபட தூண்டியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பாகிஸ்தான் வாரியத்திடமும் லீக் போட்டி அமைப்பிடமும் அக்மல் புகார் தெரிவித்துள்ளார்.

கோலியாகி இருப்பேன்

கோலியாகி இருப்பேன்

இந் நிலையில் பாகிஸ்தான் அணியில் தொடர்ந் என்னை விளையாட அனுமதித்து இருந்தால் சாதனை நாயகன் கோலி போல வந்திருப்பேன் என்று கூறி இருக்கிறார். அவர் தெரிவித்து இருப்பதாவது:

வாரியம் ஆதரவு

வாரியம் ஆதரவு

இந்திய கேப்டன் கோலிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முழு ஆதரவு அளித்து வருகிறது. சரியான வழிகாட்டுதல், சுதந்திரம் காரணமாக, சிறந்த வீரராக மாற முடிந்தது. இப்போதும் கோலிக்கு, கிரிக்கெட் வாரியத்தின் சுதந்திரம் மற்றும் வழிகாட்டுதல் கிடைத்து வருகிறது.

வருத்தம்

வருத்தம்

பெரிய தொடர்களில் என்னை அவர்கள் தேர்வு செய்யவே இல்லை. நான் சரியாக விளையாடாதது காரணமாக இருக்கலாம். ஆனாலும் அந்த நேரத்தில் என்னை நம்பி, மீண்டும் வாய்ப்பு வழங்கி இருக்கலாம். நானும், கோலி போல ஒரு சாதனை வீரராக மாறியிருப்பேன். ஆனால் எனக்கு அப்படி கிடைக்கவில்லை. அது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்திருக்கிறது என்றார்.

2009ம் ஆண்டு அறிமுகம்

2009ம் ஆண்டு அறிமுகம்

29 வயதான உமர் அக்மல் பாகிஸ்தான் அணியின் வீரர் கம்ரான் அக்மலின் சகோதரர். கேப்டன் கோலி அறிமுகமான அதே 2009 ம் ஆண்டு உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். ஆனால் எதிர்பாராவிதமாக அவரால் இன்றுவரை விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது நீக்கம் குறித்து பல முறை முன்னாள் வீரர்கள் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

6000 ரன்கள்

6000 ரன்கள்

இதுவரை 16 டெஸ்ட் மற்றும் 121 ஒருநாள் போட்டி மற்றும் 82 டி 20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். குறைவான போட்டிகள் என்பதால் 6 ஆயிரம் ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அவருடன் அறிமுகமான கோலி தற்போது சர்வதேச போட்டியில் 20 ஆயிரம் ரன்களுக்கு மேலும், 68 சர்வதேச சதங்களையும் அடித்துள்ளார்.

Story first published: Friday, September 6, 2019, 16:52 [IST]
Other articles published on Sep 6, 2019
English summary
Umar akmal blames Pakistan cricket board for not giving enough chances.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X