For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லியுடன் என்னை ஒப்பிடுவது நியாயமே இல்லை: பாக். வீரர் அக்மல்

By Siva

அடிலெய்ட்: தன்னை இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோஹ்லியுடன் ஒப்பிடுவது நியாயம் இல்லை என்று பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 3 போட்டிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுடனான போட்டியில் வெற்ற பெற நினைத்த பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகள் குறித்து பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் கூறுகையில்,

கோஹ்லி

கோஹ்லி

நான் எப்பொழுதுமே 100 சதவீதம் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் மக்கள் என்னை விராட் கோஹ்லியுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் ஆட்டத்தின் துவக்கத்தில் பேட் செய்வதால் அவருடன் என்னை ஒப்பிடுவதில் நியாயம் இல்லை.

பேட்டிங்

பேட்டிங்

கோஹ்லி என்னைப் போன்று 6 அல்லது 7வது ஆளாக பேட் செய்ய வந்தால் அவருடன் என்னை ஒப்பிடுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும். எனக்கு துவக்கத்தில் பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பாக ஆடுவேன்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் நடந்த போட்டிகளில் நான் 3வது ஆளாக பேட் செய்ததை எங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியம் பார்க்கவில்லை. விரைவில் என் மீது நம்பிக்கை வைத்து என்னை துவக்கத்தில் பேட் செய்ய அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

ரன்கள்

ரன்கள்

நான் 6வது அல்லது 7வது ஆளாக பேட் செய்வது குறித்து குறைகூறவில்லை. எத்தனையாவது ஆளாக ஆடினாலும் அதிக ரன்கள் எடுக்க முயற்சி செய்து வருகிறேன்.

ஆட்ட நாயகன்

ஆட்ட நாயகன்

உலகக் கோப்பையில் இனி வரும் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெரும் அளவுக்கு விளையாடுவேன். என் ஆட்டத்திற்காக மக்கள் என்னை நினைவு கூற விரும்புகிறேன் என்றார் அக்மல்.

Story first published: Saturday, March 14, 2015, 12:40 [IST]
Other articles published on Mar 14, 2015
English summary
Pakistan batsman Umar Akmal told that it is unfair to compare him with team India's vice captain Virat Kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X