For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்தடுத்து பவுன்சர்.. ஹரத்துல் தாக்கூருக்கு களத்திலேயே வார்னிங் தந்த நடுவர்.. ஏன் இந்த பாரபட்சம்?

சிட்னி: ஆஸ்திரேலியாவின் 8வது பேட்ஸ்மேன் பாட் கும்மின்சுக்கு தொடர்ந்து பவுன்சர் பந்துகளை வீசியது தவறு என்று இந்திய பவுலர் ஹரத்துல் தாக்கூருக்கு வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்போனில் நடக்கும் நான்காவது டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 336 ரன்கள் எடுத்தது.

அதன்பின் இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் ஆஸி. 294 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா 327 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

ஹைதராபாத்திலிருந்து சிட்னிக்கு பறந்த போன் கால்.. சிராஜை சிகரம் தொட வைத்த அந்த சம்பவம்.. பின்னணி!ஹைதராபாத்திலிருந்து சிட்னிக்கு பறந்த போன் கால்.. சிராஜை சிகரம் தொட வைத்த அந்த சம்பவம்.. பின்னணி!

சிறப்பு

சிறப்பு

இந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த ஹரத்துல் தாக்கூர் மொத்தமாக இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் மட்டும் இவர் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இன்று மிகவும் ஆக்ரோஷமாக இவர் பவுலிங் செய்தார்.

பவுன்சர்

பவுன்சர்

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் டெயில் எண்டர்கள் பேட்டிங் செய்யும் போது

ஹரத்துல் தாக்கூர் அடிக்கடி பவுன்சர் பந்துகளை வீசினார். விக்கெட் எடுக்க வேண்டும் என்பதால் பீமர் பந்துகளை வீசினார். முக்கியமாக ஆஸ்திரேலியாவின் 8வது பேட்ஸ்மேன் கும்மின்சுக்கு ஹரத்துல் தாக்கூர் நிறைய பவுன்சர்களை வீசினார்.

வார்னிங்

வார்னிங்

இதை பார்த்த நடுவர் ஹரத்துல் தாக்கூருக்கு வார்னிங் கொடுத்தார்.

அடுத்தடுத்து பவுன்சர் பந்துகளை வீச வேண்டாம் என்று கூறி, ஹரத்துல் தாக்கூருக்கு நடுவர் வார்னிங் கொடுத்தார். ஆனால் நடுவரின் இந்த வார்னிங் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்திய பேட்ஸ்மேன்கள்

இந்திய பேட்ஸ்மேன்கள்

இந்திய அணியின் டெயில் எண்டர்கள் பேட்டிங் செய்யும் போதும் இதேபோல்தான் தொடர்ந்து அடுத்தடுத்து ஆஸ்திரேலிய பவுலர்கள் பவுன்சர்களை வீசினார்கள்.

வாஷிங்க்டன் சுந்தருக்கு 10க்கும் அதிகமான பவுன்சர்களை ஹஸல்வுட் வீசினார்.

கும்மின்ஸ்

கும்மின்ஸ்

கும்மின்ஸ், ஸ்டார்க் இருவரும் நடராஜன், சைனிக்கு நிறைய பவுன்சர்களை வீசினார்கள். ஆனால் அதை எல்லாம் கேள்வி கேட்காமல் இதை மட்டும் கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம். இது மிகவும் தவறு என்று நடுவர்களை இந்திய

கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Story first published: Monday, January 18, 2021, 16:36 [IST]
Other articles published on Jan 18, 2021
English summary
Umpire gave warning to Shardul Thakur for bowling bouncers to tail enders in the final test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X