For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது தொப்பியை வச்சுக்கவா.. அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்கப்பா.. அம்பயர்களுக்கு விடுதலை

லண்டன்: கிரிக்கெட் போட்டிகளின்போது துணி ஸ்டாண்ட் போல மாறி விடுவார்கள் அம்பயர்கள். இனிமேல் அந்த கந்தரகோலத்திலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கப் போகிறது.

Recommended Video

BCCI Creates Team Mask Force To Spread Awareness

கிரிக்கெட் போட்டிகளின்போது பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் தங்களது தொப்பிகள், ஸ்வெட்டர்களை கழற்றி அம்பயர்களிடம் கொடுப்பது வழக்கம். பந்து வீசும்போது தொப்பி போட முடியாது என்பதாலும், ஸ்வெட்டர் இடையூறாக இருக்கும் என்பதாலும் இப்படிச் செய்வார்கள்.

ஆனால் தற்போது கொரோனா காலம் வந்து விட்டதால் இந்த செயல்களை அம்பயர்கள் மறுக்கலாம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதாவது அம்பயர்கள் வேண்டாம் என்று கருதினால் தொப்பி, ஸ்வெட்டர்களை வாங்காமல் நிராகரிக்கலாம்.

கிரிக்கெட்டோட அடுத்த கட்ட நடவடிக்கைகள்... ஐசிசி தலைமை நிர்வாகிகள் நாளை மறுதினம் கூட்டம்கிரிக்கெட்டோட அடுத்த கட்ட நடவடிக்கைகள்... ஐசிசி தலைமை நிர்வாகிகள் நாளை மறுதினம் கூட்டம்

கிரிக்கெட் போட்டிகள்

கிரிக்கெட் போட்டிகள்

கொரோனா முடிவடைந்த பின்னர்தான் போட்டிகள் தொடங்கப் போகின்றன. ஆனாலும் கூட இந்த பாதிப்பு நீண்ட காலத்திற்குத் தொடரக் கூடிய வாய்ப்புகள் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆலோசனைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அம்பயர்களின் பாதுகாப்பு தொடர்பான முடிவை எடுத்துள்ளது.

நிராகரிக்க உரிமை

நிராகரிக்க உரிமை

அதன்படி போட்டிகளின் வீரர்கள் தொப்பி உள்ளிட்டவற்றைக் கொடுத்தால் ஏற்பதும், நிராகரிப்பதும் அம்பயர்களின் விருப்பத்திற்கு விடப்படுகிறது. அவர்கள் விரும்பவில்லை என்றால் நிராகரிக்கலாம். அதற்குப் பகுதிகளாக பவுண்டரி லைன் பகுதியில் தங்களது தொப்பி, கண்ணாடி, ஸ்வெட்டர்களை பவுலர்கள் வைத்துக் கொள்ளலாம்.

கிளவுஸ் போடக் கூடாது

கிளவுஸ் போடக் கூடாது

அதேசமயம், அம்பயர்களுக்கு கிளவுஸ் பயன்படுத்த அனுமதி கிடையாது. காரணம், பந்தை பரிசோதிக்கும்போது கிளவுஸ் இடையூறாக இருக்கும் என்பதால் அதற்கான அனுமதி தரப்படவில்லை. அதேசமயம், பந்து பார்வையாளர் பகுதிக்குப் போய் திரும்பி வரும்போது பந்தை தொட்டவருக்கு கொரோனா இருந்தால் அந்தப் பந்தை தொடும் அனைவருக்கும் அது பரவுமா என்ற அச்சமும் உள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக பரிசீலிக்கப்படவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தற்போது உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தடைபட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகளும் தடை பட்டுள்ளன. கொரோனா எப்போது ஓயும் என்றும் தெரியவில்லை. ஆனால் கொரோனா பரவல் மட்டுப்படும்போது லாக்டவுன் நீக்கப்பட்டால் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Story first published: Tuesday, April 21, 2020, 17:54 [IST]
Other articles published on Apr 21, 2020
English summary
ECB has decided Umpires can refuse to hold caps of the bowlers if they dont want to keep
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X