For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உம்ரான் மாலிக்கை சுற்றிய மத சர்ச்சை.. ஹோட்டல் வீடியோவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்ன ஆனது??

சென்னை: இந்திய அணியின் நட்சத்திர பவுலர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் உள்ளிட்ட வீரர்கள் ஹோட்டலில் வழங்கபட்ட மரியாதையை மதிக்காமல் சென்றதாக வெளியாகியுள்ள வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ம் தேதி முதல் நாக்பூரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பெங்களூருவில் உள்ள மைதானத்திலும், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாக்பூரில் உள்ள மைதானத்திலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“தரமான செய்கை சார்” இந்தியா குறித்த கில் கிறிஸ்டின் பேச்சு.. சவால் விடுத்து எச்சரித்த முகமது கைஃப்! “தரமான செய்கை சார்” இந்தியா குறித்த கில் கிறிஸ்டின் பேச்சு.. சவால் விடுத்து எச்சரித்த முகமது கைஃப்!

புது சர்ச்சை

புது சர்ச்சை

இந்நிலையில் இந்திய வீரர்கள் ஓட்டலில் செய்த விஷயம் சர்ச்சையாகியுள்ளது. அதாவது ஓட்டலில் செக் இன் செய்யும் இந்திய அணியை சேர்ந்தவர்களுக்கு, அந்த ஹோட்டலின் அதிகாரிகள் சார்பில் நெற்றியில் திலகம் வைத்து மரியாதையுடன் வரவேற்பார்கள். இதனை ராகுல் டிராவிட் உள்ளிட்ட பலரும் கண்ணாடிகளை கழட்டிவிட்டு, ஏற்றுக்கொண்டனர்.

2 பேர் புறகணிப்பு

2 பேர் புறகணிப்பு

ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகிய 2 வீரர்களும் அதனை வேண்டாம் என புறகணித்துவிட்டு சென்றனர். இவர்களுடன் சேர்ந்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் புறகணித்தார். சிராஜ் மற்றும் உம்ரான் ஆகிய இருவரும் இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், இந்தியாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் மரியாதையை இப்படி அவமதிப்பது சரியில்லை என விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

 எப்போது நடந்தது

எப்போது நடந்தது

எனினும் இணையத்தில் பரவு இந்த வீடியோ தற்போது எடுத்தது இல்லை எனத்தெரிகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முகமது சிராஜ் மட்டுமே வாய்ப்பு பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த சம்பவம் சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து தொடர் அல்லது இலங்கை தொடரில் தான் நடந்திருக்கும் எனக்கூறப்படுகிறது.

கவுதம் கம்பீர் செயல்

கவுதம் கம்பீர் செயல்

இது ஒருபுறம் இருக்க, இந்திய வீரரும், பாஜக எம்.பியும் ஆன கவுதம் கம்பீர் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ட்வீட்டும் செய்திருந்தார். கட்சியின் கொள்கைகள், மதங்களை விட மனிதர்கள் தான் பெரிது என அவர் செய்த விஷயம் இணையத்தில் பாராட்டுக்களை பெற்று வந்தது.

இந்தியர்களின் வழிபாடு

இந்தியர்களின் வழிபாடு

மறுபுறம் நியூசிலாந்து தொடரின் போது இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், யுவேந்திர சாஹல், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுர கோயிலில் தரிசனம் செய்திருந்தனர். இதுமட்டுமல்லாமல் சிவன் கோயிலில் வழிபாடு நடத்திய புகைப்படங்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 4, 2023, 20:07 [IST]
Other articles published on Feb 4, 2023
English summary
Team India's Star pacer Umran malik Got into the Controversy after rufusing the tilak in hotel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X