For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீண்ட எதிர்பார்ப்புக்கு முடிவு.. அறிமுகமானார் உம்ரான் மாலிக்.. முதல் டி20ல் கலக்கல் ப்ளேயிங் 11!!

வில்லேஜ்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தொடக்கமே சிறப்பாக அமைந்துள்ளது.

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியுள்ளது.

ஹர்திக் பாண்ட்யா தலைமை தாங்குவதால் இந்த போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

அயர்லாந்து தொடருக்கு இப்படி தான் அணி வேண்டும்.. இன்றைய பிளேயிங் லெவனை வெளியிட்ட வாசிம் ஜாபர்அயர்லாந்து தொடருக்கு இப்படி தான் அணி வேண்டும்.. இன்றைய பிளேயிங் லெவனை வெளியிட்ட வாசிம் ஜாபர்

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

போட்டி நடைபெறும் டப்ளின் நகரத்தில் மாலை முதலே நல்ல மழை பொழிந்துள்ளதால், இரவு 8.30 மணிக்கு போடவேண்டிய டாஸ், 15 நிமிடங்கள் தாமதாக போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

உம்ரான் அறிமுகம்

உம்ரான் அறிமுகம்

இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அறிமுகமாகியுள்ளார். அவருக்காக ஹர்ஷல் பட்டேல் ப்ளேயிங் 11ல் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் 150+ கிமீ வேகத்தில் வீசி வந்த உம்ரான் மாலிக், அயர்லாந்து பேட்ஸ்மேன்களை திணறிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி வாய்ப்பு எப்படி?

வெற்றி வாய்ப்பு எப்படி?

போட்டி நடைபெறும் தி வில்லேஜ் மைதானத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்றாக அமைந்துள்ளது. மழைப்பொழிந்துள்ளதால் வேகப்பந்துவீச்சிற்கும் உதவலாம். எனவே முதலில் பேட்டிங் செய்யும் அணி 180+ ரன்கள் அடித்தால் தான் வெற்றி பெற முடியும்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுவேந்திர சாஹல், உம்ரான் மாலிக்

Story first published: Sunday, June 26, 2022, 21:12 [IST]
Other articles published on Jun 26, 2022
English summary
Umran malik Debut in India vs ireland match ( இந்தியா vs அயர்லாந்து டி20 போட்டி ) அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக் அறிமுகமாகியுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X