சிதறிய ஸ்டம்புகள்.. மின்னல் வேகத்தில் பந்துவீசிய உம்ரான் மாலிக்.. அந்த தங்கத்தை தூக்குங்க.. வீடியோ

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

இந்த நிலையில் யாரை இந்திய அணியில் சேர்க்கலாம் என்ற குழப்பம் பிசிசிஐ மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது தென்னாப்பிரிக்கா தொடரில் பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?டி20 உலககோப்பையில் பும்ராவுக்கு பதில் யார்? 3 வீரர்களுக்கு வாய்ப்பு.. யாருக்கு இடம் கிடைக்கும் ?

பும்ராக்கு பதில் யார்?

பும்ராக்கு பதில் யார்?

ஏற்கனவே இந்திய அணியில் அனுபவ வீரர் முகமது ஷமி இடம் பெற்றுள்ள நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் சிறப்பாக பந்து வீசி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். உம்ரான் மாலிக்கை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் சென்று இந்திய அணியில் விளையாட வையுங்கள் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

உம்ரான் மாலிக்

உம்ரான் மாலிக்

அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் கூட உம்ரான் மாலிக் கடைசி ஓவர் வீசி இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். எனினும் அதன் பிறகு உம்ரான் மாலிக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் உம்ரான் மாலிக் விளையாடி வந்தார். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட உம்ரான் மாலிக் ரன்களை வாரி வழங்கினார்.

இராணி கோப்பை

இந்த நிலையில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் உம்ரான் மாலிக் இடம்பெற்று கொஞ்சம் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது விக்கெட்டுகளை உம்ரான் மாலிக் வீழ்த்தினாலும் ரண்களை கட்டுப்படுத்த தவறினார்.இந்த நிலையில் உம்ரான் மாலிக்கும் தனது பழைய பார்மை மீட்டு வருகிறார். இராணி கோப்பையில் சௌராஷ்ட்ரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இதர இந்திய அணிக்காக களமிறங்க உம்ரான் மாலிக் 3 விக்கெட் கைப்பற்றினார்.

ஸ்டம்புகள் சிதறின

ஸ்டம்புகள் சிதறின

இதில் ஜெய் தேவ் உனாட்கட்க்கு உம்ரான் மாலிக் பந்து வீசினார்.அப்போது அவர் வழக்கம் போல் ஆக்ரோசமாக வீசிய இன் ஸ்விங்கை எதிர் கொள்ள முடியாமல் ஸ்டம்புகள் சிதறியது.தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதனால் உம்ரான் மாலிக்கை இந்திய அணியில் டி20 உலக கோப்பை தொடருக்காக அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
umran malik stunning yorker makes batsman out in irani cup சிதறிய ஸ்டம்புகள்.. மின்னல் வேகத்தில் பந்துவீசிய உம்ரான் மாலிக்.. அந்த தங்கத்தை தூக்குங்க.. வீடியோ
Story first published: Saturday, October 1, 2022, 22:09 [IST]
Other articles published on Oct 1, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X