For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பரிசுத்தொகை முதல் புள்ளிகள் வரை..டி20 உலகக்கோப்பையின் முக்கிய விஷயங்கள்..பலரும் அறிந்திராத தகவல்கள்

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் பலருக்கும் தெரியாத வசதிகள் மற்றும் விஷயங்கள் அடங்கியுள்ளன.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்த சூழலில் சூப்பர் 12 போட்டிகள் தொடங்கிவிட்டன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு போட்டிகள் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரையில் 16 அணிகள் பங்கேற்றிருக்கும். சர்வதேச டி20 தரவரிசைப்பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். மீதமுள்ள 4 இடங்களுக்காக 8 அணிகள் மோதிக்கொள்ளும். இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிப்பெறும். இதன் பின்னர் தலா 6 அணிகள் வீதம் 2 குழுக்கள் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி இறுதிப்போட்டி நடைபெறும்.

 புள்ளி விதிமுறைகள்

புள்ளி விதிமுறைகள்

இவை அனைத்தும் பொதுப்படையான விஷயங்களே. ஆனால் டி20 உலகக்கோப்பை தொடரில் ரிசர்வ் டே முதல் புள்ளி கணக்கீடு வரை என பலருக்கும் தெரியாத விஷயங்கள் உள்ளன. ஆம். டி20 உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை லீக் சுற்றில் ஒரு அணி வெற்றி பெற்றால் 2 புள்ளிகள் வழங்கப்படும். தோல்வியடைந்தால் புள்ளிகள் ஏதும் கிடையாது. ஒருவேளை போட்டியானது சமனில் முடிவடைவது, முடிவு எட்டப்படாதது, ஒத்திவைக்கப்படுவது போன்ற விஷயங்களுக்கு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி என பிரித்து தரப்படும்.

ரிசர்வ் டே வசதி

ரிசர்வ் டே வசதி

இதே போல இந்த தொடரில் ரிசர்வ் டே வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இரு அரை இறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே உள்ளது. ஏதாவது ஒரு காரணத்தால் போட்டிகள் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே - வில் போட்டி நடைபெறும். இரு அணிகளும் குறைந்தது 5 ஓவர்களாவது விளையாடிவிட்டால் ரிசர்வ் டேக்கு மேட்ச் தள்ளி வைக்கப்படாது. ஒருவேளை 5 ஓவர்களுக்குள் போட்டி தடைபட்டுவிட்டால், விட்ட இடத்தில் இருந்து மறுநாள் அந்த போட்டி தொடரும்.

பரிசுத்தொகை விவரம்

பரிசுத்தொகை விவரம்

டி20 உலகக்கோப்பை தொடருக்காக மொத்தம் ரூ. 420 கோடியே 7 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடரில் பங்குபெறும் 16 அணிகளுக்குமே பிரித்துக்கொடுக்கப்படவுள்ளது. ஆனால் வெற்றி, தோல்விகளை பொறுத்து பணத்தொகை குறையும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 12 கோடியே, 2 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதே போல இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்து 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 6 கோடியே 1 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதி வரை சென்று 2 அணிகள் வெளியேற்றப்படும். அப்படி வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ. 3 கோடியே 52 ஆயிரம் கொடுக்கப்படவுள்ளது.

Story first published: Saturday, October 23, 2021, 18:56 [IST]
Other articles published on Oct 23, 2021
English summary
Unknown things you need to know in T20 WorldCup 2021 fixtures Unknown things you need to know in T20 WorldCup 2021 fixtures
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X