For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேர்ஸ்டோ கழிவறையில் இருந்தாரா... சூப்பர் ஓவர் முடிவு... ஐதராபாத் அணியை கழுவி ஊத்திய சேவாக்!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 20வது போட்டியில் எஸ்ஆர்எச் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

Recommended Video

Rajasthan Royals ஒரு டீமே கிடையாது..விளாசும் Sehwag | Sanju Samson மீது தீராத குற்றச்சாட்டு

இதில் இரண்டாவதாக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி போட்டியை டிரா செய்த நிலையில் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

இந்த சூப்பர் ஓவரில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்று போட்டியிலும் வெற்றி பெற்றது.

20வது போட்டி

20வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 20வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 160 ரன்களை இலக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கொடுத்தது. போட்டியில் அந்த அணியின் துவக்க வீரர்கள் மட்டுமின்றி அடுத்து வந்த பந்த் உள்ளிட்டவர்களும் சிறப்பாக விளையாடினர்.

கேன் வில்லியம்சன் சிறப்பு

கேன் வில்லியம்சன் சிறப்பு

தொடர்ந்து இரண்டாவதாக களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் மட்டுமே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். மற்ற வீரர்கள் குறிப்பிடும்படியான பேட்டிங்கை அளிக்கவில்லை. ஆயினும் போட்டியின் இறுதிவரை விளையாடி கேன் வில்லியம்சன் போட்டியை சமன் செய்தார்.

டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

இதையடுத்து போட்டியில் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் சன்ரைசர்ஸ் சார்பில் வில்லியம்சன் மற்றும் வார்னர் விளையாடி 8 ரன்களை எடுத்தனர். இந்த எளிதான இலக்கை டெல்லி வீரர்கள் எளிதாக கடந்து வெற்றி பெற்றனர். வெற்றிக்கான கட்டாயம் உள்ள சன்ரைசர்ஸ் அணி கடந்த போட்டியில் பெற்ற வெற்றியை தொடர முடியாமல் போனது.

சேவாக் கேள்வி

சேவாக் கேள்வி

இந்நிலையில் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவை சூப்பர் ஓவரில் ஏன் விளையாட வைக்க வில்லை என்று சன்ரைசர்ஸ் அணியிடம் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கழிவறையில் இருந்திருந்தால் மட்டுமே அவரை சூப்பர் ஓவரில் விளையாட வைத்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முடிவுக்கு அணியே காரணம்

முடிவுக்கு அணியே காரணம்

நேற்றைய போட்டியில் 18 பந்துகளில் 38 ரன்களை அதிரடியாக குவித்திருந்தார் பேர்ஸ்டோ. இந்நிலையில் சிறப்பாக விளையாடிய நிலையிலும் தங்களுடைய முடிவுகளுக்கு தங்களை மட்டுமே சன்ரைசர்ஸ் அணி குற்றம் சாட்டிக் கொள்ள முடியும் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, April 26, 2021, 11:09 [IST]
Other articles published on Apr 26, 2021
English summary
Hyderabad fought well but have only themselves to blame for strange decisions -Sehwag
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X