For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிராஜ், சுந்தரை வார்த்தைகளால் தாக்கிய ஆஸ்திரேலிய ரசிகர்கள்... தொடரும் அராஜகம்!

பிரிஸ்பேன் : கடந்த சிட்னி போட்டியின்போது சிராஜ்மீது இனவாத தாக்குதலில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு, கிரிக்கெட் ஆஸ்திரேலியா விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் தற்போது காப்பாவில் நடைபெற்றுவரும் 4வது டெஸ்ட் போட்டியிலும் இது தொடர்கதையாகியுள்ளது. தற்போது சிராஜூடன் சேர்த்து வாஷிங்டன் சுந்தரையும் இனவாத தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளனர் ரசிகர்கள்.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதிப் போட்டி தற்போது பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் போட்டி நிறைவடைந்துள்ளது முதல் நாள் போட்டியின் இறுதியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது.

இனவாத தாக்குதல்

இனவாத தாக்குதல்

கடந்த சிட்னி டெஸ்ட் போட்டியின்போது சிராஜ் மற்றும் பும்ராவை இனவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் உள்ளாக்கினர். இதுகுறித்து சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடமும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்த விசாரணையை அது முடுக்கி விட்டுள்ளது.

தொடரும் சீண்டல்கள்

தொடரும் சீண்டல்கள்

இந்நிலையில் தற்போது 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் நிலையில், அங்கும் இந்த வார்த்தை துஷ்பிரயோகம் தொடர்கிறது. தற்போது சிராஜூடன் வாஷிங்டன் சுந்தரையும் சேர்த்து முட்டைப்புழு என்று ரசிகர்கள் சீண்டியுள்ளனர்.

ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய சுந்தர்

ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய சுந்தர்

இந்த தொடரின்மூலம் முகமது சிராஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்களது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகியுள்ளனர். குறிப்பாக இன்றைய போட்டியின்மூலம் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய சுந்தர், ஸ்டீஸ் ஸ்மித்தின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் அவர்மீதான இத்தகைய சீண்டல்கள் நடைபெற்றுள்ளன.

Story first published: Friday, January 15, 2021, 18:40 [IST]
Other articles published on Jan 15, 2021
English summary
Siraj was not the only Indian player who faced the unruly Behaviour of the crowd
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X