For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியின் டக் அவுட்டுக்கு நடவடிக்கை எடுத்த போலீஸ்..ரசிகர்களுக்கும் எச்சரிக்கை...என்ன சொல்கிறார் கோலி

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கோலி டக் அவுட் ஆனதை தட்டிக்கேட்க உத்தர்காண்ட் போலீசாரே களமிறங்கியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. பொறுப்பாக ஆட வேண்டிய கோலியும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

சி.எஸ்.கேவுக்கு இந்த 3 அணிதான் டஃப் கொடுக்குமாம்...அப்படி என்ன பலம் இருக்கு... முழு விவரம் இதோ சி.எஸ்.கேவுக்கு இந்த 3 அணிதான் டஃப் கொடுக்குமாம்...அப்படி என்ன பலம் இருக்கு... முழு விவரம் இதோ

இந்நிலையில் கோலியின் மோசமான ஆட்டத்தை தட்டிக்கேட்க உத்தர்காண்ட் போலீஸ் களத்தில் இரங்கி செய்துள்ள விஷயம் பேசுப்பொருளாகியுள்ளது.

 மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படு சொதப்பலாக போனது. ஓப்பனிங் இரங்கிய ஷிகர் தவான் 4 ரன்களும், ராகுல் 1 ரன்களும் எடுத்து வெளியேறினர். டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டதும் இதற்கு காரணமாய் அமைந்தது.

டக் அவுட்

டக் அவுட்

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே முதல் இரண்டு வீரர்களும் பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி கேப்டன் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. இதில் அவர் சாதனை படைக்க போகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அனைவரின் கனவிலும் மண்னை அள்ளி போடும் விதமாக ரஷித் கான் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

களமிறங்கிய போலீஸ்

களமிறங்கிய போலீஸ்

இந்திய அணியின் கேப்டனே பொறுப்பில்லாமல் டக் அவுட் ஆவதா என பலரும் கிண்டல் செய்து வரும் நிலையில் உத்தர்காண்ட் போலீஸ் ஒரு படி மேலே போய்விட்டனர். அம்மாநில காவல்துறை ட்விட்டரில், கோலி பெவிலியன் திரும்பும் புகைப்படத்தை போட்டு, ஹெல்மேட் அணிந்தால் மட்டும் போதாது, சரியாக 'ட்ரைவ்' (ஷாட் ஆடவில்லை) செய்யவில்லை என்றால் கோலியை போல் டக் அவுட் தான் ஆகவேண்டும் என சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

கோலி பதில்

கோலி பதில்

தோல்வி குறித்து பேசிய கோலி, பிட்ச்சை பற்றி நாங்கள் சரியாக கணிக்க முடியவில்லை. சர்வதேச போட்டிகளில் இது போன்ற தோல்விகள் சகஜம். பந்துவீச்சும் சில நேரம் சரியான முறையில் கைக்கொடுக்கும் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை இதனை நான் பாசீட்டிவாக தான் எடுத்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, March 13, 2021, 12:24 [IST]
Other articles published on Mar 13, 2021
English summary
Uttarakhand Police Trolling Skipper Virat Kohli for getting out on a duck in the 1st T20
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X