ஐபிஎல் 2018: யாருக்கு என்ன விருது கிடைத்தது தெரியுமா!

இந்த ஐபிஎல்-லில் கலக்கிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன

மும்பை: மும்பையில் நடந்த ஐபிஎல் 11வது சீசனின் பைனல்ஸில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரமாக வென்று மூன்றாவது முறையாக சாம்பியனானது.

ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 51 நாட்களில் 60 ஆட்டங்கள் நடந்தன. பல்வேறு தனிநபர் விருதுகள் வழங்கப்பட்டதுடன் இந்த 11வது சீசன் முடிவுக்கு வந்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆரஞ்ச் கேப்பும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆந்தரூ டை பர்பிள் கேப்பும் வென்றனர். இந்த சீசனில் விருதுகள் வென்றோர் விவரங்கள் கீழ் தரப்பட்டுள்ளன.

1. ஐபிஎல் 2018 சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ்

1. ஐபிஎல் 2018 சாம்பியன் - சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. கேப்டன் கூல் தோனி தலைமையிலான அணிக்கு வெற்றிக் கோப்பையுடன், ரூ.20 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. வீரர்கள், பயற்சியாளர்கள் உள்பட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதற்கு முன் சாம்பியன் பட்டம் வென்ற அணி

2008 - ராஜஸ்தான் ராயல்ஸ்

2009 - டெக்கான் சார்ஜர்ஸ்

2010 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2011 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2012 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2013 - மும்பை இந்தியன்ஸ்

2014 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2015 - மும்பை இந்தியன்ஸ்

2016 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

2017 - மும்பை இந்தியன்ஸ்

2. இரண்டாவது இடத்தைப் பிடித்த அணி - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

2. இரண்டாவது இடத்தைப் பிடித்த அணி - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

இரண்டாவது இடத்தைப் பிடித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ.12.5 கோடி பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்பட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதற்கு முன் இரண்டாவது இடத்தைப் பிடித்த அணி

2008 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2009 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2010 - மும்பை இந்தியன்ஸ்

2011 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2012 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2013 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2014 - கிங்ஸ் லெவன் பஞ்சாப்

2015 - சென்னை சூப்பர் கிங்ஸ்

2016 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2017 - ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ்

3. அதிக ரன்கள் குவிப்புக்கான ஆரஞ்ச் கேப் - கேன் வில்லியம்சன் (ஹைதராபாத்)

3. அதிக ரன்கள் குவிப்புக்கான ஆரஞ்ச் கேப் - கேன் வில்லியம்சன் (ஹைதராபாத்)

ஹைதராபாத் அணியின் கேப்டன் ஷேன் வில்லியம்சன் 17 ஆட்டங்களில் 735 ரன்கள் எடுத்துள்ளார். 8 அரை சதம் அடித்துள்ளார். அதிகபட்சம் 84 ரன்கள். ரூ.10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

இதற்கு முன் வென்றோர்

2008 - ஷான் மார்ஷ் (பஞ்சாப்) - 616 ரன்கள்

2009 - மேத்யூ ஹேடன் (சிஎஸ்கே) - 572

2010 - சச்சின் டெண்டுல்கர் (மும்பை) - 618

2011 - கிறிஸ் கெயில் (பெங்களூர்) - 608

2012 - கிறிஸ் கெயில் (பெங்களூர்) - 733

2013- மைக்கேல் ஹசி (சிஎஸ்கே) - 733

2014 - ராபின் உத்தப்பா (கொல்கத்தா) - 660

2015 - டேவிட் வார்னர் (ஹைதராபாத்) - 562

2016 - விராட் கோஹ்லி (பெங்களூர்) - 973

2017 - டேவிட் வார்னர் (ஹைதராபாத்) - 641

4. அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான பர்பிள் கேப் - ஆந்தரே டை (பஞ்சாப்)

4. அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான பர்பிள் கேப் - ஆந்தரே டை (பஞ்சாப்)

ஆந்தரே டை 14 ஆட்டங்களில் 24 விக்கெட்களை வீழ்த்தினார். சிறந்த பந்து வீச்சு 16 ரன்களுக்கு 4 விக்கெட்கள். ரூ.10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

இதற்கு முன் வென்றோர்

2008 - சோஹைல் தன்வீர் (ராஜஸ்தான்) - 22 விக்கெட்கள்

2009 - ஆர்பி சிங் (டெக்கான்) - 23

2010 - பிரக்யான் ஓஜா (டெக்கான்) - 23

2011 - லசித் மலிங்கா (மும்பை) - 28

2012 - மார்னே மார்க்கல் (டெல்லி) - 25

2013 - டாய்னே பிராவோ (சிஎஸ்கே) - 32

2014 - மோகித் சர்மா (சிஎஸ்கே) - 23

2015 - டாய்னே பிராவோ (சிஎஸ்கே) - 26

2016 - புவனேஸ்வர் குமார் (ஹைதராபாத்) - 23

2017 - புவனேஸ்வர் குமார் (ஹைதராபாத்) - 26

5. அதிக சிக்சர் அடித்தோருக்கான விருது - ரிஷப் பந்து (டெல்லி)

5. அதிக சிக்சர் அடித்தோருக்கான விருது - ரிஷப் பந்து (டெல்லி)

ரிஷப் பந்து 14 ஆட்டங்களில் 37 சிக்சர்கள் அடித்துள்ளார். ரூ.10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

6. வோடபோன் அதிவேக அரைசதம் விருது - லோகேஷ் ராகுல் (பஞ்சாப்)

6. வோடபோன் அதிவேக அரைசதம் விருது - லோகேஷ் ராகுல் (பஞ்சாப்)

பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், டெல்லிக்கு எதிராக 14 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் அடித்தார். அவருக்கு ரூ.10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

7. டாடா நெக்சான் சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - சுனில் நரேன் (கொல்கத்தா)

7. டாடா நெக்சான் சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - சுனில் நரேன் (கொல்கத்தா)

இந்த சீசனில் மிகச் சிறந்த ஸ்டிரைக்கிங் ரேட் உள்ள வீரருக்கு கோப்பையும் டாடா நெக்சான் காரும் பரிசாக வழங்கப்பட்டது.

8. எப்பிபி ஸ்டைலிஷ் வீரர் - ரிஷப் பந்த்

8. எப்பிபி ஸ்டைலிஷ் வீரர் - ரிஷப் பந்த்

ரூ.10 லட்சம், கோப்பை வழங்கப்பட்டது. டிவி வர்ணனையாளர்கள் தேர்வு செய்தனர்.

9. பேடிஎம் பேர் பிளே விருது - மும்பை அணி.

10. மிகச் சிறந்த வளர்ந்து வரும் வீரர் -

10. மிகச் சிறந்த வளர்ந்து வரும் வீரர் -

ரூ. 10 லட்சம் ரொக்கம் மற்றும் கோப்பையை டெல்லி அணியின் ரிஷப் பந்த் வென்றார்.

11. மோஸ்ட் வேல்யுபவல் பிளேயர் - சுனில் நரேன் (கொல்கத்தா)

11. மோஸ்ட் வேல்யுபவல் பிளேயர் - சுனில் நரேன் (கொல்கத்தா)

ரூ. 10 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

இதற்கு முன் வென்றோர்

2008 - ஷேன் வாட்சன் (ராஜஸ்தான்)

2009 - ஆடம் கில்கிறிஸ்ட் (டெக்கான்)

2010 - ஜாக்ஸ் காலிஸ் (பெங்களூர்)

2011 - கிறிஸ் கெயில் (பெங்களூர்)

2012 - கிறிஸ் கெயில் (பெங்களூர்)

2013 - ஷேன் வாட்சன் (ராஜஸ்தான்)

2014 - கிளென் மேக்ஸ்வெல் (பஞ்சாப்)

2015 - ஆந்தரே ரசல் (கொல்கத்தா)

2016 - விராட் கோஹ்லி (பெங்களூர்)

2017 - பென் ஸ்டோக்ஸ் (புனே)

12. பிட்ச் மற்றும் மைதானத்துக்கான விருது-

12. பிட்ச் மற்றும் மைதானத்துக்கான விருது-

பெங்கால் கிரிக்கெட் சங்கம் -கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் - ஜெய்ப்பூர் மைதானம்

13. வைவோ மிகச் சிறந்த கேட்ச் - டிரென்ட் போல்ட்

13. வைவோ மிகச் சிறந்த கேட்ச் - டிரென்ட் போல்ட்

ரூ.10 லட்சம், கோப்பை, வைவோ வழங்கப்பட்டது. ஐபிஎல்டி20 டாட் காமில் மக்கள் மக்கள் அளித்த வாக்குகள் மற்றும் டிவி வர்ணனையாளர்களால் தேர்வு செய்யப்பட்டது..

14. பைனல்சின் ஆட்ட நாயகன் விருது - ஷேன் வாட்சன் (சிஎஸ்கே)

15. ஸ்டார் பிளஸ் நயி சோச் விருது - மகேந்திர சிங் தோனி (சிஎஸ்கே)

15. ஸ்டார் பிளஸ் நயி சோச் விருது - மகேந்திர சிங் தோனி (சிஎஸ்கே)

மிகவும் வித்தியாசமான முறையில் சிந்தித்து செயல்பட்டதற்கான இந்த விருதுடன் ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
various awards presented to the players in the ipl.
Story first published: Monday, May 28, 2018, 0:03 [IST]
Other articles published on May 28, 2018
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X