கொடுத்த பில்டப் வீணாபோச்சே.. அறிமுக போட்டியில் சொதப்பிய தமிழக வீரர்..!! IND VS SA 1st ODI

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார் தமிழகத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயரை ஒரு ஆல் ரவுண்டராக தான் அணியில் ராகுல் தேர்வு செய்தார். பேட்டிங் வரிசையில் 6வது இடமும் வழங்கப்பட்டது.

விஜய் ஹசாரே போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என கலக்கிய இவர், அறிமுக போட்டியில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது

“வெங்கடேஷ் ஐயருக்கு ஏன் பவுலிங் தரவில்லை?” கே.எல்.ராகுல் முடிவின் பின் உள்ள காரணம்.. ரசிகர்கள் ஷாக்“வெங்கடேஷ் ஐயருக்கு ஏன் பவுலிங் தரவில்லை?” கே.எல்.ராகுல் முடிவின் பின் உள்ள காரணம்.. ரசிகர்கள் ஷாக்

வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுப்பு

அதற்கு ஏற்றார் போல், ஃபில்டிங்கில் கில்லி மாதிரி செயல்பட்ட வெங்கடேஷ் ஐயர் , ஏய்டன் மார்க்ரம் ரன் அவுட்டுக்கு காரணமாக அமைந்தார். இதனால் தமக்கு பந்துவீச வாய்ப்பு வரும் என ராகுலின் கையையும், வெள்ளை நிற பந்தையும் பார்த்து கொண்டே இருந்தார் வெங்கடேஷ் ஐயர். ஆனால் கடைசி வரை வாய்ப்பு தராமல் ஏமாற்றினார் ராகுல்

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

சரி.. பந்துவீச்சு இல்லை என்றால் என்ன, பேட்டிங்கில் கலக்குவார் என காத்திருந்தார். அதே மாதிரி, ஒரே ஆட்டத்தில் ஹீரோவாகும் அளவுக்கு தனி ஆளாக நின்று இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வெங்கடேஷ் ஐயர் 2 ரன்களில் பெரிய ஷாட் ஆட முற்பட்டு ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

நெருக்கடி

நெருக்கடி

அணியில் ஆல் ரவுண்டராக கொண்டு வர தான் தேர்வுக்குழு வெங்கடேஷை தேர்ந்து எடுத்தது. ஆனால் ராகுல் அதற்கு வாய்ப்பு வழங்கவில்லை. தற்போது பேட்டிங்கும் சொதப்பியதால் அடுத்த போட்டியில் கண்டிப்பாக ரன் அடிக்க வேண்டிய நெருக்கடியில் வெங்கடேஷ் ஐயர் தள்ளப்படுவார்

தவறான முடிவு?

தவறான முடிவு?

இதே போன்று இந்திய அணி ஆல் ரவுண்டர் என்று ஆசைப்பட்டு, போதிய பேட்ஸ்மேன்களை அணியில் எடுக்காமல் விட்டு விட்டதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஷர்துல் தாக்கூருக்கு பெரிய பொறுப்புகளை வழங்கி இளம் வீரர்களை தேவையில்லாத நெருக்கடிக்கு கே.எல்ராகுல் தள்ளிவிட்டார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Venkatesh Iyer Fails to shine in his debut match கொடுத்த பில்டப் வீணாபோச்சே.. அறிமுக போட்டியில் சொதப்பிய தமிழக வீரர்..!! IND VS SA 1st ODI
Story first published: Wednesday, January 19, 2022, 22:25 [IST]
Other articles published on Jan 19, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X