புயலாய் வந்து காணாமல் போன தமிழக வீரர்.. மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா.. விளையாடிய காதல்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்புக்காக பலரும் காத்திருந்த நிலையில், ஒரே ஐபிஎல் தொடர் மூலம் வாய்ப்புகள் தேடி வந்தது தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு.

வெங்கடேஷ் ஐயர் அதிரடி ஆட்டக்காரர், வேகப்பந்துவீச்சும் வீச கூடியவர். இதனால் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை வெங்கடேஷ் நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்டும் வெங்கடேஷ் ஐயர் அதனை பயன்படுத்தி கொள்ளவில்லை. தற்போது நடைபெறும் ஜிம்பாப்வே தொடரில் கூட அவர் இடம்பெறவில்லை என்பதே வேதனை.

கவாஸ்கர் கருத்து

கவாஸ்கர் கருத்து

எப்போதும் ஒரு தொடரை வைத்து ஒருவரை அணியில் எடுக்க கூடாது. அவர்கள் 2 அல்லது 3 சீசன்கள் விளையாட விட்டு, அவர் அந்த பார்மை தொடர்கிறாரா என்று பார்த்து தான் அணியில் எடுக்க வேண்டும். ஒரு சீசனை வைத்து நீங்கள் அவரை எடை போட்டால் உங்களுக்கு எமாற்றமே மிஞ்சும் என்று ஒரு போட்டியில் கவாஸ்கர் கூறியிருந்தார்.

ஊடக வெளிச்சம்

ஊடக வெளிச்சம்

அது தற்போது வெங்கடேஷ் ஐயரின் வாழ்க்கையில் நிஜமானது. வெங்கடேஷ் ஐயர், கொல்கத்தா அணிக்கு 2021அம் ஆண்டு சீசனில் பலமாக விளங்கினாலும், அடுத்த சீசனிலே ஃபார்மை இழந்தார். வெங்கடேஷ் ஐயருக்கு புகழ் கொட்ட தொடங்கியதும், அதிகபடியான ஊடக வெளிச்சமும் வரத் தொடங்கியதால் அவர் சற்று பதற்றம் அடைந்துவிட்டார்.

ஹர்திக் வருகை

ஹர்திக் வருகை

தொடக்கத்தில் பயம் அறியாத காளையாக திகழ்ந்த ஐயர், தற்போது ரசிகர்களின் எதிர்பார்ர்பை சுமக்க முடியாமல் திணறிவிட்டார். மேலும் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்பியதும், வெங்கடேஷ் ஐயருக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. ஹர்திக் இல்லாத சமயத்தில் தனத இடத்தை உறுதி செய்ய கிடைத்த வாய்ப்பும் கோட்டைவிட்டார் வெங்கடேஷ் ஐயர்.

Recommended Video

IND vs WI Shreyas Iyer அதிரடி ஆட்டம் Hardik கொடுத்த Finishing *Cricket
மீண்டு வருவாரா?

மீண்டு வருவாரா?

மேலும் வெங்கேஷ் ஐயருக்கு தெலுங்கு நடிகை பிரியங்கா ஜவால்கருடன் காதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. பிரியங்காவில் புகைப்படத்துக்கு வெளிப்படையாகவே கியூட் என்று கேமெண்ட் போட்டு நெட்டிசன்களிடம் சிக்கி கொண்டார். தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வெங்கடேஷ் ஐயர் பழைய அட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Venkatesh iyer is out of Indian team contention due to poor form புயலாய் வந்து காணாமல் போன தமிழக வீரர்.. மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா.. விளையாடிய காதல்
Story first published: Thursday, August 11, 2022, 10:02 [IST]
Other articles published on Aug 11, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X