For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்போது ஆடிட்டர்.. இனி ஆல் ரவுண்டர்.. இந்திய அணியில் "தமிழர்" வெங்கடேஷ் ஐயர்.. மூத்த வீரருக்கு செக்!

ஜெய்ப்பூர்; இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் அறிமுக வீரராக வெங்கடேஷ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடியவர் வெங்கடேஷ் ஐயர்.

அந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகைஅந்த 3 போட்டிகள்..சர்ச்சை, பரபரப்பு, சுவாரஸ்யம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இடையே உள்ள பங்காளி பகை

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அவர் மத்திய பிரதேச அணிக்காக விளையாடுகிறார்.

கனவு

கனவு

வெங்கடேஷ் ஐயர் படிப்பில் கில்லாடியாக திகழ்ந்தவர். சி.ஏ. தேர்வில் வென்று பல லட்சம் ரூபாய் மாத சம்பளமாக வெங்கடேஷ் ஐயருக்கு வேலை கிடைத்தது. இருப்பினும் கிரிக்கெட் மீது காதல் இருந்ததால், வேலையை விட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி, தற்போது இந்திய அணிக்காக விளையாடுகிறார்.

புதிய ஆல்ரவுண்டர்

புதிய ஆல்ரவுண்டர்

26 வயதான வெங்கடேஷ் ஐயர், ஐ.பி.எல். தொடரில் பட்டையை கிளப்பினார். இதே போன்று சையது முஸ்தாக் அலி தொடரிலும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கினார். வெங்கடேஷ் ஐயரின் வருகையால் ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹர்திக் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் பந்துவீச வில்லை. உலக கோப்பையிலும் சோபிக்கவில்லை. இதனால் இனி அவர் அணிக்கு திரும்புவது கடினமே.

 இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

1,ரோகித் சர்மா 2,கே.எல்.ராகுல், 3,சூர்யகுமார் யாதவ், 4.ஸ்ரேயாஸ் ஐயர் 5, ரிஷப் பண்ட், 6.வெங்கடேஷ் ஐயர் 7, அக்சர் பட்டேல், 8. அஸ்வின், 9. புவனேஷ்வர் குமார், 10.தீபக் சாஹர். 11. முகமது சிராஜ்

 நியூசி. அணி விவரம்

நியூசி. அணி விவரம்

1,மார்டின் குப்தில், 2.டேரல் மிட்செல் 3.மார்க் சாப்மேன், 4.பிலிப்ஸ், 5.டிம்

செஃபர்ட், 6. ரச்சின் ரவீந்திரா, 7.மிட்செல் சாட்னர், 8.டிம் செளதி 9,டாட் ஆஸ்டிலி 10. பெகுர்சன் 11. பெளல்ட்

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

ரோஹித் சர்மா டாஸ் வென்ற பின் பேசியதாவது, டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்கிறோம். களம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். இங்கு பயிற்சியில் ஈடுபட்ட போது பனிப்பொழிவு அதிகம் இருந்தது. அதனால் தான் பந்துவீச்சை தேர்வு செய்தோம்.துபாயிலிருந்து வந்து 2 நாட்கள் தான் ஓய்வில் இருந்தோம். 3 வேகப்பந்துவீச்சாளர், 2 சுழற்பந்துவீச்சாளர்,6 பேட்ஸ்மேன்கள், 1 ஆல் ரவுண்டர் என அணியை தேர்வு செய்துள்ளோம்

டிம் செளதி

டிம் செளதி

நியூசிலாந்து கேப்டன் டிம் செளதி பேசியதாவது, நாங்களும் பந்துவீச்சை தேர்வு செய்ய இருந்தோம். உலகக் கோப்பையை வெல்லாதது ஏமாற்றம் தான். இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சி தான். இந்த தொடர் இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

Story first published: Thursday, November 18, 2021, 1:35 [IST]
Other articles published on Nov 18, 2021
English summary
India vs New Zealand:Venkatesh iyer made debut for India in 1st t20 match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X