For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final 2021: இந்திய அணி "பிளேயிங் லெவன்".. குவியும் ரசிகர்கள் ஆதரவு - தரமான செய்கை இருக்கு

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியின் இந்த பிளேயிங் லெவன் எப்படி இருக்குனு பாருங்க.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை நாளை (ஜூன்.18) எதிர்கொள்கிறது.

ஏகப்பட்ட டெஸ்ட் தொடர்களில் வென்று, புள்ளிகளை குவித்து, இரு அணிகளும் இறுதிப் போட்டியை அடைந்துள்ளன. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மீது கடும் எதிர்பார்ப்பு உள்ளது. எனினும், அணித் தேர்வு என்பது எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. பல முன்னாள் வீரர்கள், தங்களது பெஸ்ட் பிளேயிங் லெவன் அணிகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியானது.. பின்னடைவை சந்தித்த வில்லியம்சன்... இந்திய வீரர்கள் நிலை என்ன? ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியானது.. பின்னடைவை சந்தித்த வில்லியம்சன்... இந்திய வீரர்கள் நிலை என்ன?

 அஷ்வின், ஜடேஜா

அஷ்வின், ஜடேஜா

அந்த வகையில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தனது பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறார். அவரது அணியில்,"ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜின்க்யா ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷமி, இஷாந்த் மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, அஷ்வின், ஜடேஜா ஆகிய இரு ஸ்பின்னர்ஸ்களையும் அவர் அணியில் சேர்த்திருக்கிறார்.

 மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

சவுத்தாம்ப்டன் பிட்ச் பொதுவாக மெதுவாக ரியாக்ட் செய்யும் தன்மை கொண்டது. எனினும், போட்டி நடைபெறும் நாளன்று, குளிர்ச்சியான காற்று விசினாலோ, ஸ்விங் கண்டிஷன்ஸ் இருந்தாலோ நியூஸிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. நாளை போட்டி தொடங்கவுள்ள நிலையில், சவுத்தாம்ப்டனில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. அங்கு குளிர்ச்சியான வானிலையும் நிலவுகிறது.

 இருவருக்கும் வாய்ப்பு

இருவருக்கும் வாய்ப்பு

குறிப்பாக, நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருப்பதால், திட்டமிட்டப்படி போட்டி நடைபெறுமா என்ற அச்சமும் நிலவுகிறது. ஒருவேளை போட்டி நடைபெற்றால், ஸ்விங் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், அஷ்வின், ஜடேஜா ஆகிய இருவரையும் தனது அணியில் சேர்த்திருக்கிறார். ஸ்விங் இருக்கும் போது, நான்கு ஃபாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்குவது தான் உத்தமம். ஆனால், பிரசாத் துணிந்து இரு ஸ்பின்னர்ஸ்களை பிக் செய்திருக்கிறார்.

 ஒன்லி இஷாந்த்

ஒன்லி இஷாந்த்

அதேபோல் மற்றொரு முக்கியமான தேர்வு என்னவெனில், இஷாந்தை அணியில் சேர்த்திருப்பது. பலரும் முகமது சிராஜுக்கு அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறிவந்தனர். ஆனால், வெங்கடேஷ் பிரசாத், சிராஜுக்கு பதில் சீனியர் பவுலர் இஷாந்துக்கே முன்னுரிமை கொடுத்திருக்கிறார். பும்ரா, ஷமியை விட சீனியர் வீரரான இஷாந்துக்கு வாய்ப்பளித்தது சரியான மூவ் என்று கூறலாம். ஆனால், அனைத்து இறுதி முடிவும் கேப்டன் விராட் கோலியின் கைகளில் தான் உள்ளது.

Story first published: Thursday, June 17, 2021, 14:01 [IST]
Other articles published on Jun 17, 2021
English summary
venkatesh prasad playing xi for wtc final 2021 - இந்திய அணி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X