For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன மாதிரியான காரியம் பண்ணீட்டிங்க.. சர்ச்சையில் சிக்கிய கங்குலி.. எல்லாத்துக்கும் காரணமே இதுதான்!

அஹமதாபாத்: இந்தியா இங்கிலாந்து இடையே நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் மைதானங்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

ஆஸ்திரேலிய தொடருக்கு பின் இந்தியா இங்கிலாந்து இடையே கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெற உள்ள கிரிக்கெட் தொடரில் இரண்டு முக்கியமான போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது.

டெஸ்ட்

டெஸ்ட்

3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது. அதன்பின் டி 20 தொடர் முழுக்க மார்ச் 12 முதல் 20ம் தேதி வரை அகமதாபாத்தில் நடக்க உள்ளது. உலகத்திலேயே அதிக மக்கள் அமரும் வசதி கொண்ட கிரிக்கெட் மைதானம் ஆகும் இது. அதன்பின் புனேவில் 3 ஒருநாளை போட்டிகளும் மார்ச் மாதத்தில் இருந்து நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

போட்டி

போட்டி

இந்த நிலையில், இந்த கிரிக்கெட் தொடர் முழுக்க குஜராத், தமிழகத்தில் சென்னை மற்றும் புனே ஆகிய மைதானங்களில் மட்டுமே நடக்கிறது. மற்ற மைதானங்கள் எதிலும் ஒரு போட்டி கூட நடக்கவில்லை. அதிலும் அஹமதாபாத் மைதானத்திற்கு தேவையில்லாத அளவிற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மற்ற மாநில கிரிக்கெட் போர்டுகள் கேள்வி எழுப்பி உள்ளது.

டெல்லி, கொல்கத்தா

டெல்லி, கொல்கத்தா

முக்கியமாக டெல்லி மற்றும் கொல்கத்தா கிரிக்கெட் போர்டுகள் இது தொடர்பாக சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. கிரிக்கெட் தொடரில் குஜராத்திற்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது ஏன்? எங்கள் மைதானங்களில் கிரிக்கெட் போட்டியை நடத்தாது ஏன்? இது என்ன விதத்தில் நியாயம் என்று கேட்டுள்ளனர்.

மண்ணின் மைந்தன்

மண்ணின் மைந்தன்

அதிலும் கொல்கத்தாவை சேர்த்த கங்குலிதான் தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கிறார். அவரும் கூட கொல்கத்தாவில் மேட்ச் நடத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. இதெல்லாம் போக முக்கியமான் மைதானங்களான, அதிக ரசிகர்கள் வர கூடிய மைதானமான மும்பை, பெங்களூரிலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தவில்லை.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இப்படி ஒருதலைப்பட்சமாக முடிவுகள் எடுக்கப்பட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டு இருப்பதை பல மாநில கிரிக்கெட் போர்டுகள் எதிர்த்து உள்ளது. கங்குலி இப்படி செய்திருக்க கூடாது என்று விமர்சனங்களை வைத்துள்ளனர். ஆனால் பிசிசிஐ எடுத்த இந்த முடிவிற்கு இரண்டு முக்கிய காரணம் உள்ளது. கொரோனா காரணமாக வீரர்களை அதிக இடங்களுக்கு பயணம் செய்ய வைக்க கூடாது என்பதற்காக மூன்று இடங்களில் மட்டும் போட்டி நடக்கிறது.

மேட்ச்

மேட்ச்

அதேபோல் அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குஜராத்தை சேர்ந்த சிலர் ஆதிக்கம் செலுத்த போகிறார்கள். அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே தற்போது குஜராத்தில் அதிக அளவில் போட்டிகளை நடத்த போவதாக கூறப்படுகிறது.

Story first published: Sunday, December 13, 2020, 22:46 [IST]
Other articles published on Dec 13, 2020
English summary
Venue selection for India vs England series creates heat in other states .
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X