For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருமே இல்லாத கடையில் டீ ஆத்திய இந்திய அணி..!! வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நடந்த அந்த ஷாக் சம்பவம்..!!

Recommended Video

Watch Video : India won their 2nd test against west indies

கிங்ஸ்டன்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட்டை 50 பேர் மட்டுமே நேரில் பார்த்துள்ளனர் என்ற தகவல், கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே, 2வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடை பெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்தியா, 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விஹாரி 111 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு ஆரம்பமே அதிர்ச்சி. பேட்டிங்கில் சொதப்பி தள்ள, 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 168 ரன்களுடன் டிக்ளேர் செய்தது.

48ல் 28...! தல தோனியை இதிலும் சாய்த்த 'கிங்' கோலி..! 8 ஆண்டுகளில் கிடுகிடு வளர்ச்சி, அசத்தல்..! 48ல் 28...! தல தோனியை இதிலும் சாய்த்த 'கிங்' கோலி..! 8 ஆண்டுகளில் கிடுகிடு வளர்ச்சி, அசத்தல்..!

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இதையடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு 468 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.ஆனால் இந்திய அணியின் அட்டாக் பவுலிங்கால் மளமளவென வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்கள் காலியாகின. 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வென்று, தொடரையும் கைப்பற்றி சாதித்தது.

ஏமாற்றிய ரசிகர்கள்

ஏமாற்றிய ரசிகர்கள்

ஆனால், இந்த தொடரில் மிகப்பெரிய ஏமாற்றத்தை இந்திய அணி நிர்வாகம் சந்தித்தது. போட்டியை காண 4வது நாளில் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கிறார். ஸ்டேடியத்தில் அந்த போட்டியை பார்க்க, மொத்தம் 50 பேர் கூட இல்லை என்று கூறியிருக்கிறார்.

50 பேர் தான் வந்தனர்

50 பேர் தான் வந்தனர்

அவர் மேலும் கூறியதாவது: வெஸ்ட் இண்டீசில் கிரிக்கெட் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. போட்டியின் 4வது நாளில், மொத்தம் 50 பேர் தான் பார்க்க வந்திருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் 50 பேர் கூட நேரில் பார்க்க வர வில்லை.

கூட்டமில்லை

கூட்டமில்லை

இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் வெஸ்ட் இண்டீசில், இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு கூட கூட்டம் வருவதில்லை என்பது வேதனை தருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனே நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், இனி வெஸ்ட் இண்டீசில் கிரிக்கெட் பார்க்க யாருமே வரமாட்டார்கள் என்றார்.

அதல பாதாளத்தில் கிரிக்கெட்

அதல பாதாளத்தில் கிரிக்கெட்

ஒரு காலத்தில், கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் தான். எந்த வித வசதிகளும், தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே கலக்கியவர்கள் அவர்கள். தற்போது கிரிக்கெட் விஷயத்தில் அதல பாதாளத்தில் உள்ளனர்.

ரசிகர்கள் வேண்டுகோள்

ரசிகர்கள் வேண்டுகோள்

அந்நாட்டு அணி மோதும் பல போட்டிகளில், இதே நிலைமை தான் நிலவுகிறது. ஆட்டத்தை காண ஸ்டேடியத்துக்கு வருபவர்கள் சொற்பான அளவிலேயே இருக்கின்றனர். மைதானத்தில் நிரம்பி வழிந்த ரசிகர் கூட்டம், இன்று ஒட்டு மொத்தமாக காணாமலேயே போயிருக்கிறது. அதற்கான உண்மையான காரணத்தை வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகமும், ஐசிசியும் கண்டறிந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ஜாம்பவான்களின் தற்போதைய வேண்டுகோள்.

Story first published: Tuesday, September 3, 2019, 11:59 [IST]
Other articles published on Sep 3, 2019
English summary
Very less number of fans watched india vs west indies test match at Kingston.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X