For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு வேற வழியே தெரியல…! அதான் இப்படி பண்ணிட்டேன்…! கோலி சொன்ன பகீர் விஷயம்

போர்ட் ஆப் ஸ்பெயின்: வேற வழியே இல்லாத காரணத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததாக கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன்களை சேர்த்தார் கோலி. தொடக்க ஜோடி சரிந்த நிலையில் இருவரின் ஆட்டம் அணிக்கு பெரிதும் கை கொடுத்தது.

120 ரன்கள் குவித்து 42வது ஓவரில் ஆட்டமிழந்தார். கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 279 ரன்களை குவித்து டக்வொர்த் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கோலி... நீங்க எல்லாரும் இனி ஒலிம்பிக்கில் விளையாட போறீங்க...!! எப்படி..? இப்படி தான்..!! கோலி... நீங்க எல்லாரும் இனி ஒலிம்பிக்கில் விளையாட போறீங்க...!! எப்படி..? இப்படி தான்..!!

சோபிக்க வில்லை

சோபிக்க வில்லை

முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சோபிக்கவில்லை. அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து கொண்ட கோலி, வழக்கம்போலவே சிறப்பாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 42வது சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார்.

42வது ஓவரில் அவுட்

42வது ஓவரில் அவுட்

ஷ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன்களை சேர்த்தார் கோலி. 120 ரன்கள் குவித்து 42வது ஓவரில் ஆட்டமிழந்தார். இந்திய அணி கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 279 ரன்களை குவித்து டக்வொர்த் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அரைஜடன் சாதனைகள்

அரைஜடன் சாதனைகள்

இந்த சதத்தின் மூலம் அரைடஜன் சாதனைகளை வாரி குவித்தார் விராட் கோலி. தனது ஆட்டம் குறித்து பேசிய விராட் கோலி, சில முக்கிய விஷயங்களையும், ஏற்படும் நெருக்கடிகளையும் பகிர்ந்து கொண்டார்.

மிகுந்த சோர்வு

மிகுந்த சோர்வு

அவர் கூறியிருப்பதாவது: உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் 60-65 ரன்கள் அடித்திருந்தபோதே மிகவும் சோர்வடைந்துவிட்டேன். ஆனால் அந்த நேரத்தில் அணி இருந்த சூழலில், நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய கட்டாயம் இருந்தது.

எனர்ஜி வரும்

எனர்ஜி வரும்

தொடக்க வீரர்கள் சோபிக்கவில்லை. அணியின் சூழல் அப்போது மிகுந்த சிக்கலாக இருந்தது. அதை எல்லாம் கருத்தில்கொண்டால், நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் எங்கிருந்தாவது எனர்ஜி கிடைத்துவிடும் என்றார்.

Story first published: Tuesday, August 13, 2019, 13:33 [IST]
Other articles published on Aug 13, 2019
English summary
Very much tired when reached 65 runs says skipper virat kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X