For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார் டேனியல் வெட்டோரி!

By Veera Kumar

வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சை வைத்தே காலம் கடத்தி வந்த, நியூசிலாந்து அணியில் பெயர் சொல்லக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரிதான். 1997ம் ஆண்டு தனது 18வது வயதில் வெட்டோரி நியூசிலாந்து ஒருநாள் அணிக்குள் காலடி எடுத்து வைத்தார்.

வெட்டோரி

வெட்டோரி

295 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள வெட்டோரி, 305 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

டெஸ்ட்

டெஸ்ட்

113 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வெட்டோரி, 362 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 4531 ரன்களையும் விளாசியுள்ளார்.

கபில் வரிசையில்

கபில் வரிசையில்

கபில்தேவ் மற்றும் இயான் போத்தம் ஆகியோருக்கு அடுத்தபடியாக, டெஸ்ட் போட்டிகளில், 4 ஆயிரம் ரன்கள் மற்றும் 300க்கும் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் டேனியல் வெட்டோரிதான்.

ஏற்கனவே பிற போட்டிகளில் ஓய்வு

ஏற்கனவே பிற போட்டிகளில் ஓய்வு

36வயதான வெட்டிரோ ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

அனைத்து போட்டிகளிலும் ஓய்வு

அனைத்து போட்டிகளிலும் ஓய்வு

உலக கோப்பை முடிந்துள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அவர் அறிவித்துள்ளார்.

ஆதங்கம்

ஆதங்கம்

உலக கோப்பை வெற்றியுடன் விடைபெறலாம் என்று இருந்ததாகவும், ஆனால், அது முடியாமல் போனதாகவும் வெட்டோரி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 31, 2015, 11:55 [IST]
Other articles published on Mar 31, 2015
English summary
Veteran left-arm spinner Daniel Vettori, the most capped ODI player for New Zealand, today bid adieu to the 50-over format, completely ending an 18-year career in the game during which he won plaudits for being an inspiring leader. The 36-year-old, whose ODI future was a subject of speculation at the end of New Zealand's superb World Cup campaign during which the team made the final, said it was time to call it a day.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X