For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஜய் ஷங்கர் உலகக்கோப்பை அணியில் கன்ஃபார்ம்.. காரணம் தினேஷ் மோங்கியா, யுவராஜ் சிங்!! என்னாது?

மும்பை : உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்ற விவாதத்தில் இடம் பெற்று வரும் முக்கிய வீரர் தமிழகத்தின் விஜய் ஷங்கர்.

அதிக அனுபவமற்ற விஜய் ஷங்கர், நேரடியாக உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா? நிச்சயம் உலகக்கோப்பை அணியில் விஜய் ஷங்கர் முக்கிய இடத்தை பெறுவார் என கூறப்படுகிறது. எப்படி?

வெற்றி தோல்வியை விட வெற்றி தோல்வியை விட "இது" மாறாம இருக்குறது தான் முக்கியம்.. அர்ஜுன் டெண்டுல்கருக்கு சச்சின் அட்வைஸ்!

சிக்கல்

சிக்கல்

இந்திய அணியில் சிக்கலாக இருக்கும் ஒரு விஷயம் பேட்டிங் வரிசையில் நான்காவது வீரராக யாரை களம் இறக்குவது என்பது தான். அந்த இடத்தில் அம்பதி ரயுடுவுக்கு பதில், விஜய் ஷங்கரை இறக்க திட்டம் உள்ளதாக தெரிகிறது.

ராயுடு பேட்டிங்

ராயுடு பேட்டிங்

அம்பதி ராயுடு தொடர்ந்து மூன்று தொடர்களில் நன்றாக ரன் குவித்தும் அவர் பேட்டிங் சரியில்லை என கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி கருதுகிறது. அம்பதி ராயுடு வேகப் பந்துவீச்சை எதிர் கொள்வதில் சிரமப்படுகிறார் என்ற விமர்சனமே இதற்கு காரணம்.

முன்னிலையில் விஜய்

முன்னிலையில் விஜய்

இங்கிலாந்து ஆடுகளங்களில் வேகப் பந்துவீச்சு நன்றாக வேலை செய்யும் என்பதால், அங்கே அம்பதி ராயுடு சமாளிப்பாரா? என்ற எண்ணம் இந்திய அணி நிர்வாகத்திற்கு உள்ளது. ராயுடுவுக்கு மாற்று வீரராக யாரை ஆட வைப்பது என்பதில் பல்வேறு வீரர்கள் பெயர்கள் அடிபட்டாலும், விஜய் ஷங்கர் தான் முன்னிலையில் இருக்கிறார் என கூறப்படுகிறது.

திட்டம்

திட்டம்

விஜய் ஷங்கரை உலகக்கோப்பை தொடரில் முக்கிய பேட்ஸ்மேனாக அறிமுகப்படுத்தி அனைத்து போட்டிகளிலும் ஆட வைக்க திட்டம் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த திட்டம் உருவான விதம் எப்படி என்பது குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலும் கூறப்படுகிறது.

ஆல்-ரவுண்டர்

ஆல்-ரவுண்டர்

1983க்கு பின் இந்தியாவின் சிறந்த உலகக்கோப்பை தொடர்கள் என்றால் அது 2003 மற்றும் 2011 உலகக்கோப்பை தொடர்கள் தான். இந்த தொடர்களில் இந்தியா ஒரு ஆல்-ரவுண்டரை அனைத்து போட்டிகளிலும் ஆட வைத்தது.

தினேஷ் மோங்கியா

தினேஷ் மோங்கியா

2003 தொடரில் தினேஷ் மோங்கியா அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றார். அவரது பங்களிப்பு அணிக்கு பெரிய வகையில் உதவவில்லை என்றாலும், அவர் சில ஓவர்களை வீசுவார் என்பதால், இந்தியா 4 பந்துவீச்சாளர்கள் மற்றும் ஏழு பேட்ஸ்மேன்களை அணியில் வைத்திருந்தது.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

அதே போல, 2011 உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் பெரும்பாலான போட்டிகளில் அதிக ஓவர்கள் பந்துவீசினார். அந்த தொடரில் பேட்டிங்கில் மட்டுமில்லாமல், பந்துவீச்சில் யுவராஜ் சிங் 15 விக்கெட்கள் அள்ளினார். தொடர் நாயகனாகவும் உருவெடுத்தார்.

ஹர்திக் பண்டியா

ஹர்திக் பண்டியா

இதே வரிசையில், இந்திய அணி இறுதிப் போட்டி வரை செல்ல வேண்டும் என்றால், ஒரு முக்கிய ஆல்-ரவுண்டர் அணிக்கு தேவைப்படுகிறார். ஹர்திக் பண்டியா அணியில் இருந்தாலும், அவர் அதிரடி பேட்ஸ்மேனாக மட்டுமே பயன்படுத்த அணி முடிவு செய்துள்ளது.

பெருமளவில் பலன்

பெருமளவில் பலன்

பதற்றமின்றி, பொறுப்பான ஆட்டம் ஆடும் திறன் பெற்ற விஜய் ஷங்கரை அனைத்து போட்டிகளிலும் ஆட வைத்தால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய அணிக்கு அது பெருமளவில் பலன் அளிக்கும் என்ற நம்பிக்கையில் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Story first published: Wednesday, March 20, 2019, 12:43 [IST]
Other articles published on Mar 20, 2019
English summary
Vijay Shankar could bat at no.4 in world cup says sources close to Team management
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X