For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையில் வெளியேற்றப்பட்டேன்..! என்னால் ஜீரணிச்சுக்கவே முடியல..! பொங்கிய அந்த தமிழக வீரர்..!

Recommended Video

Vijay Shankar about Water boy | உலக கோப்பையில் வெளியேற்றப்பட்டேன்: விஜய் சங்கர் வருத்தம்

சென்னை: உலக கோப்பையில் இருந்த என்னை தூக்கியது மிகுந்த வருத்தத்தை அளித்ததாக தமிழக வீரர் விஜய் சங்கர் கூறியிருக்கிறார்.

அண்மையில் முடிந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 2 தமிழக வீரர் இடம்பெற்றிருந்தனர். ஒருவர் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக். மற்றொருவர் இளம் வீரர் விஜய் சங்கர்.

ஆனால், லீக் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, அணியில் இருந்து விலக்கப்பட்டார். மாறாக, இந்திய அணிகளின் போட்டியின் போது களத்தில் இருந்த மற்ற வீரர்கள் குளிர்பானம் கொண்டு சென்றார். இந்த காட்சிகள் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாக, மற்றொரு வீரர் முரளி கார்த்திக் கடுமையாக இதை விமர்சித்தார்.

எழுப்பப்பட்ட கேள்வி

எழுப்பப்பட்ட கேள்வி

காயத்தால் அவதிப்பட்ட விஜய் சங்கர் ஏன் கூல்டிரிங்ஸ் பாட்டிலை கொடுத்து அனுப்பியது? அணியில் வேறு யாரும் இல்லையா? என்று டுவிட்டரில் அவர் கேள்வியையும் கேட்டிருந்தார். அதன்பிறகு, விஜய் சங்கர் இந்தியா திரும்பினார்.

கிடைத்த அனுபவங்கள்

கிடைத்த அனுபவங்கள்

தற்போது, விஜய் சங்கர் டிஎன்பிஎல் போட்டிகளில் பிசியாக உள்ளார். இந்த தருணத்தில் உலக கோப்பை தொடர், அதில் கிடைத்த அனுபவங்கள் பற்றி கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்.

வீரரின் கனவு

வீரரின் கனவு

அவர் கூறியதாவது: இந்த உலக கோப்பை போட்டி தமக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இந்திய அணி சார்பாக உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று கனவு இருக்கும்.

எனக்கு மகிழ்ச்சி

எனக்கு மகிழ்ச்சி

அந்த கனவு தனக்கு நிறைவேறியது. உலக கோப்பை தொடரில் நானும் ஓர் அங்கம் என்பது மகிழ்ச்சியே. ஆனால், உலக கோப்பையில் இருந்து வெளியேறியதை பிராக்டிகலாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ரொம்ப வருத்தம்

ரொம்ப வருத்தம்

அந்த வெளியேற்றத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. அதை ஏற்று கொள்ள முடியாமலும் இருந்தது. அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றதை கண்டு வருந்தினேன். ஒரு வீரராக டி20, டெஸ்ட், ஒருநாள் என 3 வகை கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

Story first published: Wednesday, August 7, 2019, 10:21 [IST]
Other articles published on Aug 7, 2019
English summary
I worried very much about Indian team world cup exit says vijay Shankar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X