பயத்தை விட பதற்றம் அதிகமாக இருந்தது... அணியில் கொரோனா நுழைந்த அந்த தருணம்.. மனம் திறந்த தமிழக வீரர்!

சென்னை: ஐபிஎல்-ல் வீரர்களுக்கு கொரோனா உறுதியான போது நடந்த பரபரப்பு நிமடங்களை ஐதராபாத் அணி வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், பாதிப்பு அதிகரித்தன் காரணமாக மே4ம் தேதி முதல் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மேட்சுக்கு '1' கோடி.. டபுள் 'வசூல்' - அதிர வைக்கும் 'அமீரகம்' ஐபிஎல்

ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்ட போதும் அது குறித்த பேச்சுக்கள் இன்னும் குறைந்தபாடு இல்லை.

ஐபிஎல்-ல் கொரோனா

ஐபிஎல்-ல் கொரோனா

கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கு முதலில் உறுதியான தொற்று பின்னர் சிஎஸ்கே அணியில் பயிற்சியாளர்கள் லட்சுமிபதி பாலாஜி, மைக் ஹசி ஆகியோருக்கும் பரவியது. இதன் பின்னர் டெல்லி வீரர் அமித் மிஸ்ரா, ஐதராபாத் அணி வீரர் விருதிமான் சாஹாவுக்கும் கொரோனா உறுதியானது.

கவலை அதிகம்

கவலை அதிகம்

இந்நிலையில் வீரர்களுக்கு கொரோனா உறுதியானது போது நடந்த சம்பவங்களை ஐதராபாத் வீரர் விஜய் சங்கர் மனம் திறந்துள்ளார். எனக்கு தகவல் கிடைத்த போது பயத்தை விட வீரர்களின் நிலை குறித்த கவலை தான் அதிகமாக இருந்தது. அதுவும் எனது அணியிலேயே ஒருவருக்கு உறுதியானது கவலையை அதிகரித்தது.

 கடினம்

கடினம்

ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்ட செய்தி அறிந்த தினம், நாங்கள் போட்டியில் விளையாடவிருந்தோம். அந்த செய்தி வருவதற்கு முன்புவரை நாங்கள் தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தோம். கடந்த வருடமும் நாங்கள் இதையே தான் அனுபவித்தோம். ஆனால் இது சற்று கடினமான ஒன்று. பயோ பபுளில் வாழ்க்கை சிரமமான ஒன்று. ஆனால் ஒரு வீரராக அதனை பார்க்கும் போது விதிமுறைகளை நாங்கள் கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்று எனத்தெரிவித்துள்ளார்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

தமிழக வீரரான விஜய் சங்கர் இந்த தொடரில் பெரியளவில் சோபிக்கவில்லை. 7 போட்டிகளில் விளையாடிய அவர் 58 ரன்களை மட்டுமே எடுத்தார். அதே போல பவுலிங்கிலும் 3 விக்கெட்களை மட்டுமே எடுத்திருந்தார். இதற்கு காரணம் அவருக்கு அணியில் டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்காததே என கூறப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Vijay Shankar Shares scenes of SRH camp after players tested positive for Corona
Story first published: Sunday, May 16, 2021, 13:33 [IST]
Other articles published on May 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X