இங்கே நடராஜன்.. அங்கே வியாஸ்காந்த்.. கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்த 18 வயது இலங்கை தமிழன்!

சென்னை : கிரிக்கெட் உலகில் ஒரே நேரத்தில் இரண்டு தமிழர்கள் குறித்த புகழ் பரவத் துவங்கி உள்ளது.

தமிழக வீரர் நடராஜன் பெரும் போராட்டத்துக்கு பின் ஐபிஎல் வரை வந்து, அங்கேயும் போராடி இந்திய அணியில் இடம் பெற்று இரண்டே போட்டிகளில் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் என கூறும் அளவுக்கு மாறி உள்ளார்.

மறுபுறம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இலங்கைத் தமிழர் விஜயகாந்த் வியாஸ்காந்த் லங்கா பிரீமியர் லீக் தொடரில் தன் திறமையை வெளிக்காட்டி புகழ் வெளிச்சத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

என்ன இதெல்லாம்? இந்திய அணிக்கு எதிராக திரண்ட ஜாம்பவான்கள்.. ஜடேஜாவால் வந்த வினை!

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

இலங்கைத் தமிழர்கள் அவரை நெகிழ்ச்சியுடன் பாராட்டி, புளகாங்கிதம் அடைந்து வருகிறார்கள். யாழ்ப்பணத்தில் இருந்து நீண்ட காலம் கழித்து ஒரு கிரிக்கெட் வீரர் வெளி வந்துள்ளார். அதுவும் அவர் இலங்கைத் தமிழர் என்பதால் தமிழ் சொந்தங்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

வாய்ப்பு

வாய்ப்பு

யாழ் மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவர் வியாஸ்காந்த் கல்லூரி அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் அவர் உள்ளூர் அண்டர் 19 போட்டிகளில் மட்டுமே ஆடி வந்தார். அவருக்கு லங்கா பிரீமியர் லீக் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

நேர்த்தியான ஷாட்கள்

நேர்த்தியான ஷாட்கள்

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக ஆடிய அவர் முதலில் பேட்டிங் செய்தார். அப்போதே அவர் நேர்த்தியான ஷாட்கள் ஆடினார். அவர் நான்கு பந்துகளை மட்டுமே சந்தித்தாலும், ஆண்ட்ரே ரஸ்ஸல் பந்துவீச்சில் மூன்று ரன்கள் எடுத்தார். அப்போதே பந்துவீச்சாளராக இருந்தும் நேர்த்தியான ஷாட் ஆடியது குறித்து பேசப்பட்டது.

விக்கெட்

விக்கெட்

அடுத்து பந்துவீச்சில் லெக்பிரேக் பந்துவீச்சாளரான அவருக்கு தொடர்ந்து நான்கு ஓவர்கள் கொடுத்தார் கேப்டன் திசாரா பெரேரா. அவர் மூன்றாவது ஓவரில் ஏஞ்சலோ மேத்யூஸ் விக்கெட்டை வீழ்த்தினார். மேத்யூஸ் அவர் பந்துவீச்சில் சிக்ஸ், ஃபோர் என அடித்த போதும் அவர் அஞ்சாமல் பந்து வீசினார்.

சிறந்த பந்துவீச்சு

சிறந்த பந்துவீச்சு

4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். மேத்யூஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல் என சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களுக்கு அவர் பந்து வீசிய விதம் பெரிதும் பேசப்பட்டது. அவருக்கு இது நல்ல அறிமுகமாக அமைந்தது.

20 ஆண்டுகள்

20 ஆண்டுகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு வரும் கிரிக்கெட் வீரர் வியாஸ்காந்த் தான் என கூறப்படுகிறது. இதற்கு முன் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தவர் காண்டீபன். அவரைப் பார்த்து பல இளைஞர்கள் அங்கே கிரிக்கெட் ஆட ஆர்வம் காட்டினார்கள்.

அசாதாரண சூழல்

அசாதாரண சூழல்

ஆனால், போர் மற்றும் யாழ்ப்பாணத்தில் நிலவிய அசாதாரண சூழல் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் யாரும் உருவாகவில்லை. இந்த நிலையில், வியாஸ்காந்த் கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளதால் இலங்கை தமிழர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

19 வயது

19 வயது

வியாஸ்காந்த் இந்தப் போட்டியில் ஆடிய போது 18 வயதே ஆன இளைஞர். ஆனால், போட்டிக்கு மறுதினம் அவர் தன் 19வது வயதில் அடி எடுத்து வைக்க இருந்தார். லங்கா பிரீமியர் லீக் தொடரில் அவருக்கு அதிக போட்டிகள் ஆடக் கிடைக்க வேண்டும் என்பதே முதற்கட்ட எதிர்பார்ப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் வியாஸ்காந்த்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Vijayakanth Viyaskanth make a impressive debut in Lanka Premier League
Story first published: Saturday, December 5, 2020, 16:31 [IST]
Other articles published on Dec 5, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X