For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க சொல்றது தப்பு கங்குலி.. அது சரியா வராது.. சச்சின் நண்பர் போட்ட அந்த ட்வீட்!

மும்பை : இந்திய அணி பற்றி கங்குலி சொன்ன கருத்து ஒன்றை மறுத்து, கருத்து கூறி இருக்கிறார் சச்சினின் பால்ய கால நண்பரான வினோத் காம்ப்ளி.

கங்குலி கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து சொல்லி இருக்கிறாரோ என எண்ணும் படி உள்ளது காம்ப்ளியின் கருத்து.

உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி என்ன செய்யப் போகிறது? எதை நோக்கி நகரப் போகிறது என்ற ஆர்வம் பலருக்கும் எழுந்துள்ளது. முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியும் இந்திய அணி மீது அக்கறை கொண்டு, சில கருத்துக்களை கூறி இருந்தார்.

இந்திய அணித் தேர்வு

இந்திய அணித் தேர்வு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. டி20, ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் என தனித்தனியாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சில வீரர்கள் மட்டுமே மூன்று அணியிலும் இடம் பெற்று இருந்தனர்.

கங்குலி சொன்ன கருத்து

கங்குலி சொன்ன கருத்து

இது பற்றி கருத்து சொன்ன கங்குலி, அனைத்து விக்கெட் வடிவங்களுக்கும் அதே வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அப்போது தான் வீரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். சிறந்த அணிகள் அதே வீரர்களை தொடர்ந்து வைத்திருந்தன என குறிப்பிட்டு கூறி இருந்தார்.

ஏன் அப்படி சொன்னார்?

ஏன் அப்படி சொன்னார்?

இந்திய அணியில் விராட் கோலியின் கேப்டனான பின்னர் ஒவ்வொரு கிரிக்கெட் வடிவ அணிக்கும், தனித்தனி வீரர்கள் என்ற நடைமுறை அதிகரித்து வந்தது. இதை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையில், எல்லோருக்கும் அணியில் இடம் கொடுத்து சந்தோஷப்படுத்த நினைக்காமல், நாட்டுக்கு தேவையான சிறந்த வீரர்களை அணியில் தேர்வு செய்யுங்கள் என்று கூறி இருந்தார் கங்குலி.

வினோத் காம்ப்ளி மறுப்பு

இதற்கு வினோத் காம்ப்ளி மறுப்பு தெரிவித்து இருக்கிறார். ஒவ்வொரு அணிக்கும் தேவையான வீரர்களை தான் தேர்வு செய்ய வேண்டும். அது இந்திய வீரர்களை பாதுகாக்க உதவும். மேலும், இந்திய அணியிடம் நிறைய வீரர்கள் இருப்பார்கள். இந்திய அணி நிர்வாகம் அவர்களை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அதற்கு சிறந்த உதாரணம் என கூறி இருந்தார் வினோத் காம்ப்ளி.

முன்பு எப்படி இருந்தது?

முன்பு எப்படி இருந்தது?

கங்குலி காலத்தில் எப்போதுமே இந்திய அணியில் ஒரீரு வீரர்கள் தவிர பெரும்பாலான வீரர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்று வந்தார்கள். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என கங்குலியும் சில வீரர்களை தேர்வு செய்து வைத்திருந்தார். லக்ஷ்மன், அனில் கும்ப்ளே போன்றோருக்கு ஒருநாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் ஆடவே அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது.

அதிக வீரர்கள் வேண்டாம்

அதிக வீரர்கள் வேண்டாம்

அது போல இல்லாமல், தற்போது ஏராளமான வீரர்கள் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக அதில் மட்டுமே ஆடி வருகிறார்கள். அதைத் தான் சுட்டிக் காட்டி இருக்கிறார் கங்குலி. ஸ்பெஷலிஸ்ட் வீரர்களே வேண்டாம் என கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 25, 2019, 20:58 [IST]
Other articles published on Jul 25, 2019
English summary
Vinod Kambli oppose Sourav Ganguly’s idea about same players in all formats
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X