கோலியுடன் இணைந்து கொண்ட முகமது ஷமி, பிரித்வி ஷா

Kohli, Shami and Shaw making weird gestures in Kohli's post

வெல்லிங்டன் : எப்போதுமே தன்னுடைய டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பலவிதமான பகிர்வுகளை தொடர்ந்து பதிவிட்டு வருபவர் கேப்டன் விராட் கோலி. உள்ளூரில் இருந்தால், மனைவி அனுஷ்காவுடனும் வெளிநாட்டில் இருந்தால், சக வீரர்கள் உள்ளிட்டவர்களுடனும் அவரது புகைப்படங்கள் இருக்கும்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் வரும் 21ம் தேதி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. முன்னதாக தற்போது பயிற்சி ஆட்டத்தில் இரு அணிவீரர்களும் ஆடி வருகின்றனர்.

தனக்கு கிடைத்த இடைப்பட்ட நேரத்தில் ட்விட்டர் ரசிகர்களை எண்டர்டெயின் செய்யவும் கோலி மறக்கவில்லை. இந்த முறை அவர் வித்தியாசமான போஸை சக வீரர்கள் முகமது ஷமி மற்றும் பிரித்வி ஷாவுடன் இணைந்து செய்து அதை புகைப்படமாக வெளியிட்டுள்ளார். இதனால் டிவிட்டர் பக்கமே அல்லோல கல்லோப்பட்டு வருகிறது.

21ம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டி

21ம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதிவரை வெல்லிங்டனின் பேசின் ரிசர்வ்வில் நடைபெறவுள்ளது. இதற்கென பயிற்சி போட்டியில் இரு அணிகளும் மோதி வருகின்றன. முன்னதாக நடைபெற்ற சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இரு அணிகளும் தலா ஒரு தொடரை கைப்பற்றியுள்ளன.

டெஸ்ட் தொடரை வெல்ல முனைப்பு

டெஸ்ட் தொடரை வெல்ல முனைப்பு

ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா, 60 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் இந்த தொடரில் மோதவுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் தங்களின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகளை உயர்த்திக்கொள்ள முடியும் என்பதால் இந்த தொடரில் வெல்ல இரு அணிகளும் முனைப்புடன் உள்ளன.

இணைந்துக்கொண்ட சக வீரர்கள்

டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பயிற்சி ஆட்டமும் நடைபெற்று வரும்நிலையில் இடைப்பட்ட நேரத்தில் தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தவும் விராட் கோலி தவறவில்லை. அவரும் முகமது ஷமி, பிரித்வி ஷா ஆகியோரும் இணைந்து ரசிகர்களுக்கு எவர்டைம் உற்சாகத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளனர். அவர்களின் பல்வேறு முக சேட்டைகளை கொண்ட புகைப்படத்தை விராட் கோலி தன்னடை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்கீழே "புதிய பகிர்வு, அழகான நண்பர்கள்" என்ற கேப்ஷனையும் அவர் பதிவிட்டுள்ளார்.

மீம்ஸ்களை வெளியிட்ட ரசிகர்கள்

விராட் கோலி, முகமது ஷமி மற்றும் பிரித்வி ஷா ஆகியோரின் இந்த சேட்டை பதிவு விடுமுறை தினத்தில் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்குள்ளாக்கியுள்ளது. புகைப்படம் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் கொடுத்ததுடன் பல்வேறு விதமான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு ரசிகர் அஜித்துடன் விராட்டை கம்பேர் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

மீம்ஸ்களால் நிரம்பிய டிவிட்டர்

மீம்ஸ்களால் நிரம்பிய டிவிட்டர்

இவ்வாறு விடுமுறை தினமான இன்று தங்களுடைய சேட்டையை விராட் கோலி மற்றும் டீம் துவக்கி வைக்க டிவிட்டர் பக்கமே தாறுமாறு தக்காளி சோறாக ரசிகர்களின் பல்வேறு மீம்ஸ்களால் நிரம்பி வழிந்தது. இந்த முப்படையின் முப்பரிமாணங்களை பலவிதங்களில் கம்பேர் செய்து ரசிகர்கள் விடுமுறையை தெறிக்க விட்டனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Kohli, Shami and Shaw making weird facial gestures in Kohli's post
Story first published: Sunday, February 16, 2020, 18:12 [IST]
Other articles published on Feb 16, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X