For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மக்கள் தலைவன் விராட் கோலி.. இளகிய மனசு..குழந்தைக்காக மனம் இறங்கியது முதல் அநீதிக்காக நின்றது வரை..

மும்பை: தலைவன் என்பவர் தனக்காக மட்டுமல்ல, பிறருக்காகவும் உழைக்க கூடியவர். தவறுக்கு எதிராக குரல் தருபவர்

படை எப்போது எல்லாம் மனம் தளர்கிறதோ, அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்க கூடியவர். அதுமட்டுமல்ல களத்தில் முதல் ஆளாக நின்று போராடி மற்றவர்களுக்கும் ஊக்கத்தை தரக் கூடியவர்,

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்..? போட்டியில் 4 வீரர்கள்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனைஇந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்..? போட்டியில் 4 வீரர்கள்..!! பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனை

கேப்டனாக விராட் கோலி மக்கள் மனதை வென்ற சம்பவங்களை தான் தற்போது நாம் காண போகிறோம்.

முகமது ஷமி விவகாரம்

முகமது ஷமி விவகாரம்

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி , பாகிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை தழுவியது. இதற்கு முகமது ஷமி தான் காரணம் என்றும், அவர் இஸ்லாமியர் என்பதால் வேண்டுமேன்றே மோசமாக விளையாடியதாக சமூக வலைத்தளத்தில் குற்றஞ்சாட்டினர். இதற்கு எதிராக குரல் கொடுத்த விராட் கோலி, முகமது ஷமிக்கு துணை நிற்பதாக கூறி மக்கள் மனதை வென்றார். இதே போன்று பாகிஸ்தான்ள வென்றதும் கோலி முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்தார்

ஸ்மித்துக்கு வரவேற்பு

ஸ்மித்துக்கு வரவேற்பு

விராட் கோலிக்கும், ஸ்மித்துக்கும் பல பிரச்சினைகள் நடந்துள்ளது. ஆனால் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடை பெற்ற பின்பு 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். அப்போது களத்திற்கு ஸ்மித் வந்த போது இந்திய ரசிகர்களை அவரை அவமானப்படுத்தும் விதமாக கூக்குரலிட்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத கோலி, ரசிகர்களை கண்டித்து, அவரை வரவேற்க சொன்னார். பின்னர் இந்திய ரசிகர்கள் சார்பாக கோலி ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்டு கொண்டார்

இளகிய மனசு

இளகிய மனசு

கேப்டன் விராட் கோலிக்கு அவ்வளவு ஒர இளகிய மனசு.. ஒரு மாற்றுத்திறனாளி குழந்தை இந்திய அணி வீரர்களை பார்ப்பதற்காக அமர்ந்து இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த இந்திய வீரர்கள் யாரும் அந்த குழந்தையை கண்டுகொள்ளவில்லை. ஆனால் விராட் கோலி அந்த குழந்தையிடம் சென்று ஆட்டோகிராஃப் போட்டு வாழ்த்து தெரிவித்தார்,

காயத்திலும் சதம்

காயத்திலும் சதம்

2016ஆம் ஆண்டு ஐ.பி.எல். சீசனில் விராட் கோலிக்கு கையில் காயம் ஏற்பட்டது. கையில் தையல் போட்டு பேட்டையே பிடிக்க முடியாத நிலை. ஆனால், விராட் கோலி தன் வலியையும் மீறி களத்திற்கு வந்த பேட் செய்த விராட் கோலி சதம் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். தடைகள் இருந்தாலும், அதனை தகர்த்து எறிந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக கோலி விளங்கினார்.

Story first published: Sunday, January 16, 2022, 20:26 [IST]
Other articles published on Jan 16, 2022
English summary
Virat kohli a true Leader and Kind hearted Person, High points of kohli as captainமக்கள் தலைவன் விராட் கோலி.. இளகிய மனசு..குழந்தைக்காக மனம் இறங்கியது முதல் அநீதிக்காக நின்றது வரை..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X