For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன கேப்டன்ஷிப் பண்ற..?? களத்தில் பாடம் எடுத்த கோலி.. கடுப்பான ராகுல்.. அணியில் விரிசல்?

கேப் டவுன்: இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் களத்திலேயே எப்படி கேப்டன்ஷிப் செய்வது என்று ராகுலுக்கு விராட் கோலி பாடம் எடுத்தார்

குறிப்பாக முதல் 2 ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் பெரிய பார்ட்னர்ஷிப் வைத்து வெற்றி பெற்றனர்

இதை உடைக்கும் விதமாக கே.எல்.ராகுல் எதும் வித்தியாசமாக செய்யவில்லை என்ற புகார் எழுந்தது

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மாலன் விக்கெட்டை ஒரு ரன்னில் தூக்க, பெவுமாவையும் ரன் அவுட்டாக்கினர், ஏய்டன் மார்க்ரமும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்தது.

பெரிய பார்ட்னர்ஷிப்

பெரிய பார்ட்னர்ஷிப்

எனினும் இந்தியா அளித்த நெருக்கடியை , டி காக் உடைத்தார். டி காக், வெண்டர்டுசன் ஜோடி அதிரடியாக விளையாட இந்தியாவின் கையில் இருந்து போட்டி நழுவியது. இதனை உணர்ந்த விராட் கோலி, கே.எல்.ராகுலிடம் கோபமாக பேசி ஃபில்டிங் நிறுத்துவது குறித்து எதோ பேசினார்

கோலி அறிவுரை

கோலி அறிவுரை

இதற்கு கே.எல்.ராகுல், எதோ விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால் கோலி அதனை ஏற்காமல் கோபமாக அறிவுரை வழங்கி விட்டு சென்றார். கே.எல்.ராகுல் அனுபவம் இல்லாமல் தினறும் போது கோலி உதவி செய்த இந்த காட்சி வைரலானது. ஆனால் அதன் பிறகு நிகழ்ந்த காட்சிகள் தான் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

கொண்டாடவில்லை

கொண்டாடவில்லை

பிரஷித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தது. இந்த 2 கேட்சையும் சூப்பராக விராட் கோலி எல்லைக்கோட்டில் நின்று பிடித்தார். ஆனால் கேட்ச் பிடித்ததும் பந்தை கோலி தூக்கி போட்டுவிட்டு யாரிடமும் பேசாமல் திரும்பிவிட்டார். ஒரு விக்கெட் விழுந்தால், அனைத்து வீரர்களும் கேட்ச்பிடித்தவரை பாராட்டுவது வழக்கம்.

அணியில் விரிசல்

அணியில் விரிசல்

ஆனால் கோலி பிடித்த கேட்சை யாரும் பாராட்டாமல் அவர்கள் இடத்திலேயே நின்றனர். இதனால் அணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. ஆனால் கடைசி ஓவர் என்பதால் தான் கொண்டாட்டத்தில் ஈடுபடாமல் அனைவரும் அதே இடத்தில் நின்ற இருக்கலாம் என ஒரு சில ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, January 23, 2022, 19:13 [IST]
Other articles published on Jan 23, 2022
English summary
Virat kohli advices KL Rahul about fielding setup in 3rd ODI vs SA என்ன கேப்டன்ஷிப் பண்ற..?? களத்தில் பாடம் எடுத்த கோலி.. கடுப்பான ராகுல்.. அணியில் விரிசல்?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X