சின்னவயசு ப்ரெண்ட் மாதிரி நடந்துப்பாரு... ஆனா நம்ம சொல்ற விஷயம் நடக்கலன்னா... மனம்திறந்த ஷமி

மும்பை : கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பான பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.

விராட் கோலி கேப்டனாக மட்டுமின்றி சிறப்பான பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக தன்னை நிரூபித்து வருகிறார்.

இவ்ளோ கஷ்டமா.. கொரோனாவால் அஸ்வின் சந்தித்த சிக்கல்கள்.. ரசிகர்களிடம் மனம் திறப்பு!

இந்நிலையில் விராட் கோலியின் செயல்பாடுகள் குறித்து முகமது ஷமி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இந்தியாவின் கேப்டன் விராட்கோலி தலைமையிலான 20 பேர் கொண்ட இந்திய அணி அடுத்த மாதம் துவக்கத்தில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் அடுத்தடுத்து விளையாடவுள்ளன.

பல்வேறு சாதனைகள்

பல்வேறு சாதனைகள்

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை அடுத்தடுத்து கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் சிறப்பான வகையில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

பாராட்டுக்கு ஆயத்தம்

பாராட்டுக்கு ஆயத்தம்

வரும் மாதம் 18ம் தேதி துவங்கவுள்ள இந்த தொடரில் நியூசிலாந்துடன் மோதவுள்ளது. இந்த இந்த தொடரை வெற்றி கொண்டால், முதல் தொடரை வெற்றி கொண்ட அணி என்ற பாராட்டுக்கு இந்தியா சொந்தமாகும். இதற்கென இந்திய அணி சிறப்பான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பான விராட் கேப்டன்ஷிப்

சிறப்பான விராட் கேப்டன்ஷிப்

இந்நிலையில் இந்த அணியில் இடம்பெற்றுள்ள முகமது ஷமி விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். ஒரு கேப்டனாக வீரர்களுக்கு பக்கபலமாக விராட் இருப்பார் என்றும் முழு சுதந்திரம் அளிப்பார் என்றும் ஷமி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரமாக செயல்படலாம்

சுதந்திரமாக செயல்படலாம்

மைதானத்தில் நாம் செய்லபடுத்தும் திட்டங்கள் தோல்வி அடையும்போது மட்டுமே அவரது ரியாக்ஷன் வேறு விதமான அமையும் என்றும் ஷமி தெரிவித்துள்ளார். மற்றபடி பௌலர்களாக நாம் சுதந்திரமாக செயல்பட முடியும். கேப்டனிடம் இருந்து முழு ஆதரவும் நமக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குழுவாக செயல்பட உதவுகிறது

குழுவாக செயல்பட உதவுகிறது

நம்மிடம் சிறுவயது நண்பரை போல விராட் கோலி நடந்து கொள்வார் என்றும் அவ்வப்போது ஜோக்குகள் அடிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். விராட் கோலி வீரர்களுக்கு அளிக்கும் இத்தகைய சுதந்திரம் ஒரு குழுவாக அணி சிறப்பாக செயல்பட உதவுவதாகவும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat has no air about himself, jokes with us as if he's a childhood friend -Shami hails
Story first published: Sunday, May 9, 2021, 17:47 [IST]
Other articles published on May 9, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X