For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க ரெண்டு பேருக்கும் கோச்சே தேவையில்லை... அவங்களுக்கு அவங்களே கோச்தான்... காட்டிச் புகழ்ச்சி

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 23வது போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Recommended Video

Virat Kohli , AB deVilliers are their own coaches -Simon Katich |Oneindia Tamil

இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றிக்கு தீவிரம் காட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 கிளம்பிய சர்ச்சை.. கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி.. கிறிஸ் லின் வெளியிட்ட பகிர் தகவல்! கிளம்பிய சர்ச்சை.. கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி.. கிறிஸ் லின் வெளியிட்ட பகிர் தகவல்!

இந்நிலையில் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் டீ வில்லியர்ஸ் குறித்து கோச் சைமன் காட்டிச் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு தீவிரம்

வெற்றிக்கு தீவிரம்

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரண்டாவது மற்றும் 3வது இடங்களில் உள்ள இந்த அணிகள் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

4 வெற்றிகள்

4 வெற்றிகள்

இந்த சீசனில் சிறப்பான துவக்கத்தை ஆர்சிபி அணி கொடுத்து வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் சிஎஸ்கேவிற்கு எதிரான கடந்த போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 69 ரன்களில் தோல்வி அடைந்தது ஆர்சிபி.

அணியின் சிறப்புக்கு காரணம்

அணியின் சிறப்புக்கு காரணம்

ஆர்சிபி அணியில் உலகின் மிகசிறந்த இரண்டு வீரர்கள் விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் உள்ளது அந்த அணியின் சிறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அவர்கள் இருவரும் கடந்த வருடங்களில் தங்களது அணியின் நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளனர்.

தங்களுக்கு தாங்களே கோச்கள்

தங்களுக்கு தாங்களே கோச்கள்

இதனிடையே, அவர்கள் இருவரும் சிறப்பான உலக தரத்திலான வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்ப தன்னுடைய கோச்சிங்கை மாற்றிக் கொண்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் இருவருக்கும் கோச்சிங்கே தேவையில்லை என்றும் தங்களுக்கு தாங்களே அவர்கள் சிறந்த கோச்களாக இருப்பதாகவும் அணியின் தலைமை கோச் சைமன் காட்டிச் தெரிவித்துள்ளார்.

அசத்தும் விராட்

அசத்தும் விராட்

உலக தரத்திலான வீரராக இருந்தாலும் விராட் கோலி இன்னமும் கற்றுக் கொள்வதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருவதாகவும் காட்டிச் தெரிவித்துள்ளார். அவருடைய போட்டியை சிறப்பாக்கும் எந்த புதிய விஷயம் குறித்தும் அவர் கேட்டு அறிந்துக் கொள்வார் என்றும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்

Story first published: Tuesday, April 27, 2021, 20:46 [IST]
Other articles published on Apr 27, 2021
English summary
Virat & AB de Villiers are their own coaches because they know their game -Katich
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X