விராட் கோலிக்கு குறையாத ஆர்சிபி பாசம்.. மேக்ஸ்வெல்லை கண்டதும் நெகிழ்ச்சி.. ரசிகர்கள் உற்சாகம்!

நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டி20 போட்டியின் டாஸ் தாமதமாகியுள்ளதால், இரு அணி வீரர்களும் பேசிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Recommended Video

IND vs AUS 2nd T20: Predicted Playing 11 என்ன? | Aanee's Appeal

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் டி20 தொடரில் ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது.

இதன்மூலம் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

இந்தியா vs ஆஸி டி20 போட்டி.. ஈரப்பதத்தால் டாஸ் போடுவதில் தொடரும் தாமதம்.. 8 மணிக்கு முக்கிய அப்டேட்! இந்தியா vs ஆஸி டி20 போட்டி.. ஈரப்பதத்தால் டாஸ் போடுவதில் தொடரும் தாமதம்.. 8 மணிக்கு முக்கிய அப்டேட்!

டாஸ் தாமதம்

டாஸ் தாமதம்

அதே நேரத்தில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருப்பதற்கான முனைப்பில் களமிறங்குகிறது. மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு அணிக்கும் இடையிலான போட்டி மைதானத்தின் தன்மையை ஆராய்ந்த பிறகே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓவர்கள் குறைப்பு

ஓவர்கள் குறைப்பு

அதேபோல் கிட்டத்தட்ட ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஆட்டத்தில் ஓவர்கள் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதனால் ஆட்டத்தில் வெற்றிபெறுவதில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். அதேபோல் இந்திய அணியில் பும்ரா மீண்டும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி பாசம்

ஆர்சிபி பாசம்

இதனிடையே டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இந்தியா - ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்போது இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை பார்த்ததும் கட்டிபிடித்து நட்பு பாராட்டினார். இதனைத்தொடர்ந்து ஹர்சல் படேலும் மேக்ஸ்வெல்லுடன் சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தார்.

ரசிகர்கள் நெகிழ்ச்சி

ரசிகர்கள் நெகிழ்ச்சி

தொடர்ந்து விராட் கோலி - மேக்ஸ்வெல் கட்டிபிடித்து நட்பு பாராட்டிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதனை ஆர்சிபி அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian star Batsmen Virat Kohli Shares the Friednship Bond RCB Batsmen Maxwell. That Photo goes trending in Social Media.
Story first published: Friday, September 23, 2022, 19:54 [IST]
Other articles published on Sep 23, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X