For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒத்துமையா பிரார்த்தனை செஞ்சா அதோட வலிமையே தனிதான்... விராட் கோலி சிலிர்ப்பு

மும்பை : ஒற்றுமையாக பிரார்த்தனை செய்தால் அதற்கு வலிமை அதிகம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நேற்றிரவு தன்னுடைய வீட்டில் அவர் தன்னுடைய மனைவியுடன் இணைந்து விளக்கேற்றினார்.

Recommended Video

நம்முடைய ஒற்றுமையை உலகுக்கு உணர்த்துவோம் - கோலி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி நேரத்தில் தன்னலம் பார்க்காமல் சேவை ஆற்றிவரும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் நேற்றிரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைத்து விளக்குகளையும் அமர்த்திவிட்டு விளக்குகளை ஏற்றும்படி பிரதமர் மோடி கோரியிருந்தார்.

இப்படி சுயநலமா இருக்கீங்களே.. இங்கிலாந்து மக்கள் செய்த காரியம்.. விளாசிய கிரிக்கெட் வீரர்!இப்படி சுயநலமா இருக்கீங்களே.. இங்கிலாந்து மக்கள் செய்த காரியம்.. விளாசிய கிரிக்கெட் வீரர்!

 109 பேர் உயிரிழப்பு

109 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச அளவில் உயிரிழப்பு ஏறக்குறைய 70,000ஐ நெருங்கியுள்ளது. 12,00,000ற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் 109 பேர் கொரோனாவிற்கு தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் 4289 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரதமரின் கோரிக்கை

பிரதமரின் கோரிக்கை

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும்வகையில் கடந்த 24ம் தேதியிலிருந்து நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த நேரத்தில் மக்கள் அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்து வருகிறார்.

நாடு தழுவிய பாராட்டு

நாடு தழுவிய பாராட்டு

இந்நிலையில், இந்த நெருக்கடி நேரத்தில் சிறப்பாக பணியாற்றிவரும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவர்களின் செயல்பாடுகளை மெச்சும்வகையில், நேற்றிரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்குகளை அமர்த்திவிட்டு வாசலில் விளக்கேற்ற மோடி கேட்டுக் கொண்டிருந்தார்.

விளக்கேற்றிய விராட், அனுஷ்கா

விளக்கேற்றிய விராட், அனுஷ்கா

மோடியின் இந்த கோரிக்கையை செவிமடுத்து, கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையும் அவரது மனைவியுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களது வீடுகளில் விளக்கேற்றினர். அனைவரும் ஒற்றுமையுடன் செய்யும் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம் என்று விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா சர்மா டிவீட்

இதனிடையே, தான் நீண்ட நெடுங்காலமாக விளக்கேற்றி வருவதாகவும், கஷ்டப்படுபவர்களின் நலனுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருவதாகவும் அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் தன்னலம் பார்க்காமல் உழைத்துவரும் அனைத்து பணியாளர்களுக்கும் அவர்களது பாதுகாப்பிற்காக கூடுதலாக பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, April 6, 2020, 20:47 [IST]
Other articles published on Apr 6, 2020
English summary
Pray for every being and stand together, -Kohli tweeted
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X