For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசியில என்னையும் நிதி கொடுக்க வச்சுட்டீங்களேடா... கொரோனாவிற்கு நிதியளித்த விராட்

மும்பை : கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இந்திய அளவில் பல்வேறு விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

Recommended Video

Records by Rohit Sharma that tough to break

பல நூறு கோடிகளுக்கு சொந்தக்காரரான கேப்டன் விராட் கோலி நன்கொடை அளிக்காதது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து நிதியுதவி அறிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் எவ்வளவு தொகை கொடுத்தனர் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

நன்கொடை அளிக்கும் பிரபலங்கள்

நன்கொடை அளிக்கும் பிரபலங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பெரும்பாலான மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உயிரிழப்பு 30,000 த்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 6.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

பாலிவுட் நட்சத்திரங்கள் நன்கொடை

பாலிவுட் நட்சத்திரங்கள் நன்கொடை

போட்டிகள் எதுவும் இன்றி வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை சேர்ந்த பிரபலங்கள், மக்கள் இந்த நேரத்தில் வீட்டிற்குள்ளேயே இருக்கக்கோரி அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் சச்சின் டெண்டுல்கர், ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர். பாலிவுட் பிரபலங்களும் நன்கொடை அளித்து வருகின்றனர்.

கலாய்த்த ரசிகர்கள்

கலாய்த்த ரசிகர்கள்

கொரோனாவால் இந்தியாவும் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், சச்சின் உள்ளிட்ட வீரர்கள் நன்கொடை அளித்துள்ளனர். அவர்களின் இந்த நன்கொடைக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நன்கொடை அளிக்காத முன்னாள் மற்றும் இந்நாள் கேப்டன்கள் தோனி மற்றும் கோலியையும் கலாய்க்க அவர்கள் தவறவில்லை.

தொகையை அறிவிக்கவில்லை

இந்நிலையில் கேப்டன் விராட் கோலி, பிரதமர் மற்றும் மகாராஷ்டிர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளதாக தன்னுடைய டிவிட்டர் பக்க்ததில் தெரிவித்துள்ளார். ஆனால் எவ்வளவு தொகை அளிக்கப்பட்டது என்பது குறித்து அவர் அறிவிக்கவில்லை. கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு தன்னையும் தன்னுடைய மனைவி அனுஷ்கா சர்மாவையும் மனம் உடைய செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் நிலை கேள்விக்குறி

ஐபிஎல் நிலை கேள்விக்குறி

சர்வதேச அளவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகள் இதனால் ரத்து செய்யப்பட்டு, பல லட்சம் கோடிகளில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீரர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். சர்வதேச அளவில் அசாதாரணமான சூழல் நிலவிவரும் நிலையில், அனைவரும் செய்வதறியாத நிலையில் உள்ளனர்.

Story first published: Monday, March 30, 2020, 14:39 [IST]
Other articles published on Mar 30, 2020
English summary
Virat Kohli, Anushka Sharma pledge support to COVID-19 relief funds
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X