For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்சிபி ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி முக்கிய வேண்டுகோள்.. வைரல் வீடியோ!

Recommended Video

RCB ரசிகர்களாக ஒன்றிணைவோம் | Virat Kohli's Emotional Message to RCB Fans | IPL Auction 2020

விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2020க்கான ஏலம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 13 வீரர்களை தக்க வைத்துள்ள நிலையில் ஏலத்தில் பங்கேற்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 27.90 கோடி ரூபாயுடன் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளது. அதனிடம் 12 இடங்கள் உள்ளன.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள ஏலத்தில் ஆர்சிபி அணியின் பின்னால் ரசிகர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று அதன் கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.

கொல்கத்தாவில் நாளை நடைபெறுகிறது

கொல்கத்தாவில் நாளை நடைபெறுகிறது

இந்திய கிரிக்கெட்டின் பெருமைமிகு வடிவமாக பார்க்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் மற்றும் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆண்டுதோறும் இவர்கள் ஏலம் மூலம் எடுக்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டிற்கான ஏலம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது.

13 வீரர்கள் தக்கவைப்பு

13 வீரர்கள் தக்கவைப்பு

இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்காக அணியில் 13 வீரர்களை தக்க வைத்துள்ள ஆர்சிபி அணி, நாளைய ஏலத்தில் 27.90 கோடி ரூபாயுடன் களமிறங்க உள்ளது.

ரசிகர்களுக்கு விராட் கோலி வீடியோ செய்தி

ரசிகர்களுக்கு விராட் கோலி வீடியோ செய்தி

கொல்கத்தாவில் ஐபிஎல் 2020க்கான ஏலம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அந்த அணியின் டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு விராட் கோலி வீடியோ ஒன்றின் மூலம் செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

விராட் கோலி கோரிக்கை

விராட் கோலி கோரிக்கை

தனக்கும் ஆர்சிபி அணிக்கும் தொடர்ந்து ஆதரவளித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு அந்த வீடியோவில் பேசும் விராட் கோலி, நாளைய ஏலத்தின்போது ஆர்சிபியின் பின்னே ரசிகர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நிர்வாக குழு சிறப்பான செயல்பாடு

நிர்வாக குழு சிறப்பான செயல்பாடு

ஆர்சிபியை வலுப்படுத்தும்வகையில், அணியின் நிர்வாக குழு, மைக் மற்றும் சைமன் உள்ளிட்டவர்கள் மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விராட் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி உறுதி

ஆர்சிபி அணி ஏற்கனவே வலிமையாக உள்ள போதிலும், அதன் அடிப்படைகளை வலுவாக்கி, அணியை மேலும் வலிமை படுத்தும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த விராட் கோலி, இதன்மூலம் வரும் ஐபிஎல் தொடர் அணிக்கு மேலும் சிறப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, December 18, 2019, 11:15 [IST]
Other articles published on Dec 18, 2019
English summary
Virat thanks for the IPL fans and asks to get behind the RCB Team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X