For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சும்மா இல்லை.. 10 கோடி.. சமூக வலைதளங்களில் தோனி, சச்சினை தூக்கி அடித்த விராட் கோலி!!

மும்பை : விராட் கோலி சமூக வலைதளங்களில் தான் ஒரு "கிங்" என மீண்டும் நிரூபித்துள்ளார். மூன்று பிரபல சமூக வலைதளங்களிலும் சேர்த்து அவரை பின்தொடரும் மக்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளது.

இன்று சமூக வலைதளங்களில் இல்லாத பிரபலம் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவு சமூக வலைதளங்களை பிரபலங்கள் ஆக்கிரமித்துள்ளனர். அதில் தோனி, சச்சின் போன்ற இந்தியாவின் முன்னணி பிரபலங்களை வீழ்த்தி கோலி முதல் இடம் பெற்றுள்ளார்.

Virat Kohli beat Dhoni, Sachin Tendulkar with 100 million social media followers

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய மூன்று தளங்கள் தான் இன்று முன்னணி சமூக வலைதளம் ஆகும். அவற்றில் பேஸ்புக்கில் 3.7 கோடி, ட்விட்டரில் 2.94 கோடி, இன்ஸ்டாகிராமில் 3.35 கோடி மக்கள் கோலியை பின்தொடர்ந்து வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக 10 கோடி.

கோலி பாட்டுப் பாடினதை பற்றி பேசறீங்களே.. ஸ்டீவ் ஸ்மித் குத்தாட்டம் போட்டது மறந்து போச்சா? கோலி பாட்டுப் பாடினதை பற்றி பேசறீங்களே.. ஸ்டீவ் ஸ்மித் குத்தாட்டம் போட்டது மறந்து போச்சா?

கிரிக்கெட்டில் வேறு எந்த பிரபலமும் கோலிக்கு அருகே கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் அதிக பதிவுகள் இடும் சச்சினை 1.47 கோடி மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். அதே போல, தோனியை 1.3 கோடி மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

மற்ற விளையாட்டுக்களை பொறுத்தவரை, கால்பந்தாட்ட வீரர்கள் கோலியை விட அதிக மக்களை ஈர்த்துள்ளனர்.

இந்த சமூக வலைதளங்களை பொறுத்தவரை, பிரபலங்கள் தங்களை பின்தொடரும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விளம்பர பதிவுகள் மூலம் பெரும் பணம் சம்பாதிக்க முடியும். அந்த வகையிலும் கோலியை மிஞ்ச இந்தியாவில் ஆள் இல்லை. கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதித்த பிரபலம் கோலி என ஒரு அறிக்கை கூறுகிறது.

Story first published: Saturday, May 18, 2019, 18:50 [IST]
Other articles published on May 18, 2019
English summary
Virat Kohli beat Dhoni, Sachin Tendulkar with 100 million social media followers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X