For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10,000 ரன்கள் எடுத்து சச்சின் சாதனை மட்டுமல்ல, இந்த சாதனைகளையும் முறியடித்தார் கோலி

Recommended Video

ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 10000 ரன்களை கடந்து கோலி சாதனை- வீடியோ

விசாகப்பட்டிணம் : விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 10,000 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார்.

மேலும், பல சாதனைகளையும் இந்த போட்டியில் கோலி நிகழ்த்தியுள்ளார். அது மட்டுமின்றி போட்டி நடைபெறும் விசாகப்பட்டிணம் மைதானம் கோலிக்கு மிகவும் ராசியான மைதானம்.

கோலி சாதனை மன்னன் என்றாலும், இன்றைய போட்டியில் அவர் நிகழ்த்திய சாதனைகள் மிக சிறப்பானது.

பத்தாயிரம் ரன்களை எட்டினார்

பத்தாயிரம் ரன்களை எட்டினார்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடும் முன் கோலி ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை எட்ட 81 ரன்கள் எடுக்க வேண்டியதிருந்தது. இந்த போட்டியில் கோலி நிலைத்து நின்று ஆடி 81 ரன்களை கடந்தார். அப்போது ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை கடந்த ஐந்தாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.

சாதனையாளர்கள் பட்டியல்

சாதனையாளர்கள் பட்டியல்

இதுவரை இந்தியாவில் சச்சின், கங்குலி, டிராவிட் மற்றும் தோனி மட்டுமே பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர்கள் ஆவர். இந்த சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்தார் கோலி. மேலும், உலகளவில் பத்தாயிரம் ரன்களை கடந்த 13வது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார்.

சச்சினை முந்தினார்

சச்சினை முந்தினார்

உலகளவில் அதிவிரைவாக பத்தாயிரம் ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் செய்தார். இதற்கு முன் சச்சின் 259 இன்னிங்க்ஸ்களில் கடந்து இருந்தார். தற்போது கோலி 205 இன்னிங்க்ஸ்களில் பத்தாயிரம் ரன்களை கடந்துள்ளார்.

இந்திய மண்ணில் 4000

இந்திய மண்ணில் 4000

இந்த போட்டியில் மேலும் பல சாதனைகளை படைத்துள்ளார் கோலி. இந்திய மண்ணில் குறைந்த போட்டிகளில் 4000 ரன்களை கடந்த சாதனையும் படைத்துள்ளார். கோலி 78 இன்னிங்க்ஸ்களில் 4000 ரன்களை கடந்தார். சச்சின் 92 இன்னிங்க்ஸ்களிலும், தோனி 99 இன்னிங்க்ஸ்களிலும் 4000 ரன்களை கடந்து இருந்தனர். அவர்கள் சாதனையை கோலி இன்று முறியடித்தார்.

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக அதிகம்

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக அதிகம்

அதே போல, ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையையும் பதிவு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சச்சின் 1573 ரன்கள், ராகுல் டிராவிட் 1348 ரன்கள், கங்குலி 1142 ரன்கள் குவித்துள்ளனர்.

Story first published: Wednesday, October 24, 2018, 16:58 [IST]
Other articles published on Oct 24, 2018
English summary
Virat Kohli becomes fastest to score 10000 runs in ODI runs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X