For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாவ்..! தொடர்கிறது கோலியின் சாதனைகள்.. கேப்டனாக 9000 ரன்கள்.. 40வது சதம்.. சச்சினை நெருங்கும் கோலி

நாக்பூர்: சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக 9,000 ரன்களை கடந்து, ரிக்கி பாண்டிங் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து இந்திய அணி களமிறங்கியது. சிறிது நேரத்திலேயே ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அவுட்டானார்.

Ind vs Aus 2nd ODI : 40வது சதம் அடித்த கோலி.. ஆஸி.வுக்கு எளிய இலக்கு நிர்ணயித்த இந்தியா! Ind vs Aus 2nd ODI : 40வது சதம் அடித்த கோலி.. ஆஸி.வுக்கு எளிய இலக்கு நிர்ணயித்த இந்தியா!

இந்திய அணி தடுமாற்றம்

இந்திய அணி தடுமாற்றம்

தவான் 21, அம்பதி ராயுடு 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவே இந்திய அணி சற்று தடுமாறியது. ஆனால் கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று அதிரடி காட்டினார்.

சதமடித்த சதம்

சதமடித்த சதம்

அவருக்கு தமிழக வீரர் விஜய் சங்கரும் பக்கபலமாக இருந்தார். 107 பந்துகளில் விராட் கோலி சதம் அடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 40ஆவது சதம் இது.

50 அரைசதம் அடித்து சாதனை

50 அரைசதம் அடித்து சாதனை

இந்த போட்டியில் ஒருநாள் போட்டிகளில் 50 அரைசதங்களை கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார். கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்பதாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

159 இன்னிங்ஸ், 40 சதம்

159 இன்னிங்ஸ், 40 சதம்

இந்த சாதனையை விராட் கோலி 159 இன்னிங்களில் படைத்துள்ளார். அதற்கு முன்னர் இந்த சாதனையை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 204 இன்னிங்ஸ்களில் படைத்திருந்தார்.

9000 ஆயிரம் ரன்கள்

9000 ஆயிரம் ரன்கள்

சதம் விளாசியதோடு, கேப்டனாக வேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்கள் அடித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஆனால்... சச்சின் தனது 355வது ஒருநாள் போட்டியில் தான் 40வது சதம் அடித்தார்.

அதேபோல் இதற்கு முன்பாக கேப்டனாக கோலி நான்காயிரம், ஐந்தாயிரம், ஆறாயிரம், ஏழாயிரம், எட்டாயிரம் ரன்களை விரைவாக குவித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேகத்தில் சென்றால்... கிரிக்கெட் உலகில் யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை எட்டிவிடுவார் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதனை சதம்

சாதனை சதம்

சச்சினை விட 139 இன்னிங்ஸ் குறைவாக விளையாடி விராட் கோலி 40 சதம் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களில் யாருமே விராட் கோலியின் சாதனையை நெருங்குவது சாத்தியமில்லாத ஒன்று என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இதற்கு முன்பாக கேப்டனாக கோலி நான்காயிரம், ஐந்தாயிரம், ஆறாயிரம், ஏழாயிரம், எட்டாயிரம் ரன்களை விரைவாக குவித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேகத்தில் சென்றால்... கிரிக்கெட் உலகில் யாரும் செய்ய முடியாத பல சாதனைகளை எட்டிவிடுவார் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, March 5, 2019, 17:57 [IST]
Other articles published on Mar 5, 2019
English summary
Indian captain Virat Kohli has broken the record of Ricky Ponting's record of 9,000 in international cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X