என்ன மனுசன்யா விராட் கோலி..!! மும்பை டெஸ்டில் ஆச்சரியம்.!!

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Virat Kohli, Dravid visit NZ's dug-out, congratulate history-maker Ajaz Patel | Oneindia Tamil

முதல் இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 62 ரன்களுக்கு சுருண்டது. தற்போது இந்திய அணி ஃபாலோ ஆன் தராமல் 2வது இன்னிங்சை விளையாடுகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல், முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

சாதனை

சாதனை

இதன் மூலம் ஜிம் லேக்கர், அனில் கும்ப்ளேவிற்கு பிறகு ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அஜாஸ் பட்டேலுக்கு மும்பை ரசிகர்களும் இந்திய அணி வீரர்களும் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர்.

கோலி

கோலி

நேற்றைய ஆட்டநேரம் முடிந்தவுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்தின் வீரர்கள் அறைக்கு சென்றார். அங்கு இருந்த அஜாஸ் பட்டேலுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். விராட் கோலியின் வருகையை சற்றும் எதிர்பாராத நியூசிலாந்து வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

மாற்றம்

மாற்றம்

எப்போதும் களத்தில் ஆக்கோரஷமாக காணப்படும் விராட் கோலி, தற்போது களத்திற்கு வெளியே, மிகவும் சாந்தமாக மாறிவிட்டார். சிரித்த முகத்துடன் பத்திரிகையாளர்களை அணுகுவது. முகமது ஷமி விவகாரத்தில் குரல் கொடுத்தது என ஆளே மாறிவிட்டார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

விராட் கோலிக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்ட போதும், அவர் டிரஸிங் ரூம்மிற்கு சென்று நடுவரின் முடிவை பார்த்து சிரித்தார். இதுவே பழைய விராட் கோலியாக இருந்திருந்தால் பேட் ஒரு பக்கம் போய் விழுந்திருக்கும். அங்கிருந்த கண்ணாடி ஏதாவது உடைந்திருக்கும். விராட் கோலியின் இந்த மாற்றம் ரகிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virat kohli behaviour surprised Kiwis in Mumbai Test. Virat Kohli congratulates Ajaz Patel by visting Kiwis Dressing room.
Story first published: Sunday, December 5, 2021, 10:36 [IST]
Other articles published on Dec 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X