For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி..!! உண்மையில் இவர் கிங் தான்..!!

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

கேப்டனாக இருந்தாலும் சரி.. இல்லை என்றாலும் சரி.. நான் கிங் தான் என்று நிரூபித்துள்ளார் விராட் கோலி

இந்திய அணிக்கு 297 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்தது. கேப்டன் ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இனி நான் கேப்டன் இல்லை.. யார் கிட்டயும் கை கட்டி நிற்க தேவையில்லை..!! விராட் கோலி பரபரப்பு பேச்சு..இனி நான் கேப்டன் இல்லை.. யார் கிட்டயும் கை கட்டி நிற்க தேவையில்லை..!! விராட் கோலி பரபரப்பு பேச்சு..

கோலி அரைசதம்

கோலி அரைசதம்

இதனையடுத்து களத்திற்கு வந்த விராட் கோலி, பந்துகளை அழகாக இடைவெளி பார்தது அடித்து, ரன்களை ஓடியே எடுத்தார். மேலும் மோசமான பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி, ரன்களை சேர்த்தார். இதன் மூலம் விராட் கோலி 63 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார் விராட் கோலி. சரி, இனி அதிரடியை காட்டி சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார்

சச்சின் சாதனை முறியடிப்பு

சச்சின் சாதனை முறியடிப்பு

இதன் மூலம் விராட் கோலி கடைசியாக விளையாடிய 6 இன்னிங்சில் 5 அரைசதம் விளாசியுள்ளார். இந்த இன்னிங்ஸ் மூலம் அந்நிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் 5065 ரன்களும், தோனி 4520 ரன்களும் அடித்திருந்தனர். தற்போது அந்த சாதனையை கோலி முறியடித்தார்.

பாண்டிங் சாதனை முறியடிப்பு

பாண்டிங் சாதனை முறியடிப்பு

இதே போன்று அந்நிய மண்ணில் அதிக ரன்களை அடித்த

வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முறியடித்தார். இந்தப் போட்டியில் சதம் அடித்து இருந்தால் , சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை கோலி சமன் செய்து இருப்பார்.

2வது வீரர்

2வது வீரர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் கங்குலி, டிராவிட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார். விராட் கோலி தற்போது 1338 ரன்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் - 2001 ரன்கள், 3,சௌரவ் கங்குலி - 1313 ரன்கள் 4,. ராகுல் டிராவிட் - 1309 ரன்கள்

Story first published: Wednesday, January 19, 2022, 22:00 [IST]
Other articles published on Jan 19, 2022
English summary
Virat Kohli breaks Sachin. Ponting records as Most ODI runs in away சச்சின், ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி..!! உண்மையில் இவர் கிங் தான்..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X