சோலே பட்டூரேவானாலும் பந்து வீச்சானாலும் கவனமாக கையாள வேண்டும்- கோலி

India vs Srilanka 3rd T20 Match Preview | match update |pune Stadium| match prediction

பூனா: தன்னுடைய விருப்பத்திற்குரிய சோலே பட்டூரேவானாலும் பந்துவீச்சானாலும் ஒரே கவனத்தில் தான் அதை அணுகுவதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய டயட்டில் மிகுந்த கவனம் கொண்டவர் விராட் கோலி. அதேபோல எதிரணியினரின் பந்து வீச்சையும் கவனத்துடன் எதிர்கொள்வார். இந்நிலையில் இந்த இரண்டையும் தான் ஒரே கவனத்துடன் கையாள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா -இலங்கை அணிகளுக்கிடையிலான சர்வதேச டி20 தொடரின் 3வது போட்டி பூனாவில் இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், தீவிர பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி, அதனிடையே தனது டிவிட்டர் ரசிகர்களுக்கு டிவீட் போடவும் மறக்கவில்லை.

தோனி விரைவில் ஓய்வு.. அதிர வைக்கும் முடிவு.. ரகசியத்தை உடைத்த கோச்!

பூனாவில் நடக்கும் 3வது போட்டி

பூனாவில் நடக்கும் 3வது போட்டி

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் ஆண்டின் முதல் சர்வதேச டி20 போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

டிவிட்டரில் பகிர்வு

டிவிட்டரில் பகிர்வு

இலங்கையுடனான 3வது போட்டியையொட்டி தீவிர பயிற்சியில் ஈடுபட்ட கேப்டன் விராட் கோலி, தான் மைதானத்தில் பந்து வீச்சை எதிர்கொள்ளும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி பதிவு

மைதானத்தில் தான் ஆடும் புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கோலி, தன்னுடைய விருப்ப உணவு சோலே பட்டூரே மற்றும் எதிரணி வீசும் பந்து இரண்டிற்கும் ஒரேமாதிரியான கவனம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

பந்துவீச்சிலும் கவனம்

பந்துவீச்சிலும் கவனம்

தன்னுடைய உடல்நலத்திலும் டயட்டிலும் மிகுந்த கவனம் கொண்டவர் விராட் கோலி. ஆனால் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவு சோலே பட்டூரே என்று பல சமயங்களில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு பிடித்தமான சோலே பட்டூரே மற்றும் பந்துவீச்சு இரண்டையும் ஒப்பிட்டு அவர் பேசியுள்ளார். சிரிப்பு எமோஜியை போடவும் அவர் மறக்கவில்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Chholle Bhature and Bowling from Opponents deserve the same focus - Kohli
Story first published: Friday, January 10, 2020, 12:33 [IST]
Other articles published on Jan 10, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X